கொரோனா பாதிப்பு.. 3 வார சிகிச்சைக்குப் பின்.. டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்.. நன்றி சொன்ன ஜீவிதா!

By

ஐதராபாத்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நடிகர், டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Recommended Video

சாப்ட மட்டும் தெரியுமா? ரியோவில் அசிங்கபடுத்திய அனிதா | Bigg boss 4 Tamil

நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

உறுதிப்படுத்தி இருந்தார்

உறுதிப்படுத்தி இருந்தார்

மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகர், ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேண்டாம் வதந்தி

வேண்டாம் வதந்தி

இதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. பின்னர் மற்றொரு ட்விட்டில், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

சுவாசிக்க முடிகிறது

சுவாசிக்க முடிகிறது

இந்நிலையில், அவர் உடல்நிலைப் பற்றி மீண்டும் வதந்தி பரவியது. இதனால் நடிகை ஜீவிதா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 'ராஜசேகர் நலமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்தார். இப்போது அவரால் நன்றாக சுவாசிக்க முடிகிறது. அவர் விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று கூறியிருந்தார்.

ராஜசேகர டிஸ்சார்ஜ்

ராஜசேகர டிஸ்சார்ஜ்

அதே போல, சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார். சிறப்பான சிகிச்சை அளித்து தனது கணவரை காப்பாற்றியதற்காக, மருத்துவமனைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X