கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை.. நடிகர், டாக்டர் ராஜசேகர் உடல் நிலை.. மருத்துவமனை அறிக்கை!

By

ஐதராபாத்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராஜசேகர் உடல் நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் ராஜசேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த 16 ஆம் தேதி தகவல்கள் வெளியாயின.

தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்று கடந்த 17 ஆம் தேதி உறுதிப்படுத்தினார் டாக்டர் ராஜசேகர்.

வீடு திரும்புவோம்

வீடு திரும்புவோம்

'என் மனைவி ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் குணமாகிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம் என்று டாக்டர் ராஜசேகர் அதில் கூறியிருந்தார்.

கொரோனா போராட்டம்

கொரோனா போராட்டம்

இதையடுத்து அவர்கள் நலம்பெற ஏராளமான ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாகக் கூறினர். இந்நிலையில், அவர் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார்.

வதந்திகள் கிளம்பின

வதந்திகள் கிளம்பின

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல் நிலை பற்றி வதந்திகள் கிளம்பின. இது பரபரப்பானது. பின்னர் மற்றொரு ட்வீட்டில், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம் என்று ஷிவாத்மிகா கூறினர்.

சீராக உள்ளது

சீராக உள்ளது

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் உடல் நிலை சீராக உள்ளது. நோயில் இருந்து மீண்டும் வருகிறார். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X