சிவகார்த்திகேயன் படத்தை திடீரென பாராட்டிய ராமதாஸ்.. இதுதான் காரணமா?

சென்னை : பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை பாராட்டினார்.

சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ்கே ப்ரோடக்ஷன் தயாரித்து நடித்த திரைப்படம் டான்.

மே 13ந் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இத்திரைப்படம் இதுவரை ரூ 100 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

டான்

டான்

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெற்று இன்னும் திரையில் ஓடிவருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டலான நடிப்பு

எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டலான நடிப்பு

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், இயக்குநர் என பலவிதமான ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல மிரட்டி உள்ளார். கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? என்பதே படத்தின் கதை.

பாராட்டிய ரஜினி

பாராட்டிய ரஜினி

டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. டான் படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்ல விமர்சனத்தை கொடுத்து இருந்தார்கள். டான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபியை அழைத்து பாராட்டி இருந்தார்.

பெற்றோரை கொண்டாடுங்கள்

பெற்றோரை கொண்டாடுங்கள்

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். "பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)" என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். என பதிவிட்டுள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X