விடாமுயற்சி வசூலை ஓரம் கட்டிய டிராகன்! தலைகாட்ட முடியாமல் தவிக்கும் தல ரசிகர்கள்.. காப்பாத்துமா GBU

சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படத்தை லைகா தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் வசூல் ரீதியாக படம் படுதோல்வி படமாக மாறியது. இதனால், ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இப்படி இருக்கும்போது, கடந்த 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் படம் விடாமுயற்சி படத்தை விட அதிக வசூலைக் குவித்து உள்ளது என திரைத்துறையில் தகவல்கள் உலா வருகிறது.

அதாவது, அஜித் குமாரின் 62 வது படம் விடாமுயற்சி. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவாக்கப்பட்ட படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் முதன் முதலாக அஜித்துடன் இணைந்து உருவாக்கிய படம். மேலும் மகிழ் திருமேனி, த்ரிஷா, அர்ஜுன், அனிருத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருந்ததால் படம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் வருகையால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் நடைபெற்றது. விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Dragon 3rd Week Box Office Collection Beats Ajithkumar Vidaamuyarchi Life Time BO Collection

விடாமுயற்சி படம் ரிலீஸுக்கு முன்பே பெரும் நஷ்டத்தில் ரிலீஸ் ஆனது. அதாவது படம் ரிலீஸுக்கு முன்னர் லைகாவுக்கு இருந்த நஷ்டத் தொகை, ரூபாய் 124 கோடிகள் என கூறப்படுகிறது. ரிலீஸுக்கு பின்னர் வந்த ஷேர் ரூபாய் 14 கோடிகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நஷ்ட தொகை ரூபாய் 110 கோடிகளானது. இது மட்டும் இல்லாமல் விடாமுயற்சி படத்தின் கதை பாரமவுண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதை. இதனால் பாரமவுண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட பணம் ரூபாய் 17.5 கோடிகள். இதனால் மொத்த நஷ்டத் தொகை ரூபாய் 127.5 கோடிகள் என கூறப்படுகிறது.

வசூல் விபரம்: மொத்தத்தில் படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூபாய் 137.5 கோடிகள் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இப்படியான நிலையில், டிராகன் படத்தின் வசூல் விடாமுயற்சி படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் செய்துவிட்டது என்று தகவல் உலா வருகிறது. அதாவது கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறியது. காரணம் படத்தின் கதை , திரைக்கதை நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

Dragon 3rd Week Box Office Collection Beats Ajithkumar Vidaamuyarchi Life Time BO Collection

குட் பேட் அக்லி: டிராகன் படம் இதுவரை அதாவது இந்த மூன்று வாரத்தில் மட்டும் ரூபாய் 140 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்து, சிறப்பாக ஓடிக்கொண்டு உள்ளது. மேலும் படம் வசூல் குவிக்கும் என்பதால் வசூல் அளவு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜித்குமார் ரசிகர்கள் அமைதியாக உள்ளார்களாம். இன்னும் சொல்லப்போனால் கப்சிப் மோடில் உள்ளார்கள். தற்போது அஜித் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ள படம் என்றால் அது குட் பேட் அக்லி படம்தான். இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dragon 3rd Week Box Office Collection Beats Ajithkumar Vidaamuyarchi Life Time BO Collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X