தனுஷ் மாதிரி இருப்பது பிளஸ்ஸா? இல்லை மைனஸா? தனுஷ் பெயரைச் சொல்லாமல் பிரதீப் ரங்கநாதன் பதில்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் டிராகன். அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படம் வெளியாகி இதுவரை ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதீப்பிடம் நீங்கள் தனுஷ் போல இருப்பது உங்களுக்கு பிளஸ்ஸா இல்லை மைனஸா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்தது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான படம் டிராகன். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தை தயாரித்தது மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேரடியாக ரிலீஸ் செய்தது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி நடித்திருந்த லவ் டுடே படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து இருந்ததால் அவர்களின் காம்போ மீண்டும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.

குறிப்பாக, படத்தின் டிரைலர் வெளியான பின்னர் இணையவாசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் கூறிய விஷயம் என்றால் அது, படம் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் இரண்டாம் பாகம் போல் இருக்கும் போலயே எனக் கூறினார்கள். இந்தக் கருத்துக்கு முதலில் இயக்குநர் அளித்த பதில் பலருக்கும் நம்பிக்கையை கொடுக்கவில்லை. அதாவது, டிரைலர் இருப்பது படத்தின் முதல் 40 நிமிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
டிராகன்: படம் ரிலீஸான தினத்தில், முதல் காட்சி முடிந்த பின்னர், தியேட்டரில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆரவாரத்திற்கு பின்னர், தியேட்டரிலேயே, ' இது டான் 2 இல்லை, டிராகன்' எனக் கூறினார். அஷ்வத் மாரிமுத்து இவ்வாறு கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. படம் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரதீப் : படம் தற்போது ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்து ஓடி வருவதால், படத்தின் வெற்றி விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பிரதீப் ரங்கநாதனிடம், நீங்கள் தனுஷ் மாதிரி இருப்பது உங்களுக்கு பிள்ஸ்ஸா இல்லை மைனஸா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, " நான் எப்போது என்னை கண்ணாடியில் பார்த்தாலும் நான் என்னைத்தான் பார்க்கிறேன். நான் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது" என பதில் அளித்தார்.

தனுஷ்: அப்போது அதே கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, " எனக்கு பிரதீப் ரங்கநாதன் அவராகவே தான் தெரிகிறார். நீங்கள் கூறும் வேறு ஏதோ ஒரு நடிகர் போலத் தெரியவில்லை. இந்தக் கேள்விகள் சும்மா கேட்க வேண்டும் எனவும், ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும் கேட்கப்படுகிறது. பிரதீப், பிரதீப் ஆகத்தான் உள்ளார், வேறு யார் போலவும் இல்லை" எனக் கூறினார். இருவரும் தனுஷ்ஷின் பெயரைச் சொல்லாமல் பதில் அளித்தது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











