Dragon Blue Sattai Maran: தமிழ்நாடே பாராட்டும் டிராகன்.. ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்றாருனு பாருங்க!
சென்னை: பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின் , அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், வி.ஜே. சித்து. ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது டான் படத்தின் இன்னொரு வெர்ஷனாக இருக்குமோ எனத் தோன்றியது. டான் படத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை என்றால், ரகடான மாணவன், மிகவும் கண்டிப்பான பிரின்ஸ்பல் இந்த இரண்டு ஒற்றுமைகளையும் தவிர இந்த படத்திற்கும் டான் படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தின் முதல் பாதியை பார்க்கும்போது ஏற்கனவே பார்த்த படத்தை போல் உள்ளதே எனத் தோன்றினாலும், திரைக்கதை நகர்வு என்பது நினைத்ததைப் போல நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் இடைவேளையில் அருமையான ட்விஸ்ட் வைத்திருந்தார்கள், ஒரு சீரியஸான இடைவேளை வைத்திருந்தார்கள். இடைவேளை வரைக்கும் பரவாயில்லை, இரண்டாம் பாதியில் வேறு மாதிரியான திரைக்கதை அமைத்திருந்தார்கள். ஹீரோ செய்த தவறை எல்லாம் அவரே பார்க்கும் படி திரைக்கதை அமைத்திருந்தார்கள். ப்ரீ கிளைமாக்ஸ் வரை இந்த படம் இளைஞர்களுக்கான படமாகத்தான் இருந்தது. ஆனால், கடைசி 15 நிமிடங்களில் சீரியஸான எமோஷ்னலான காட்சிகளாக உள்ளது. ஹீரோ ஜெயிக்க என்ன வேண்டுமானாலும் செய்வான், அது தவறில்லை என்றுதானே வழக்கமாக படம் எடுப்பார்கள், ஆனால் தவறு செய்தால், அது யார் தவறு செய்தாலும் தவறுதான், எல்லா தவறுக்கும் தண்டனை உள்ளது. நல்லவனுக்கு நல்லது தான் நடக்கும் என்பதை பாடமாக எடுக்காமல், சிறப்பான திரைக்கதையால் நகர்த்தியுள்ளார்கள்.

நேர்வழி: அதன் பின்னர்தான் படம் எல்லோருக்குமான படமாக மாறியது. எப்போதுமே நேர் வழிதான் சரியானது என சொல்லாமல் சொன்னதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங்கான படமாக உள்ளது. லவ் டுடே படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நல்ல கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருந்தார்கள். மிஷ்கின் தனது நடிப்பால் படத்தின் பலமாக மாறியுள்ளார்.

பிரேக் அப்: இந்த படத்திலும் சரி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலும் சரி காதலித்தால் பிரேக் அப் என்பது சாதாரணமானது எனக் கூறியுள்ளார்கள். அது வரவேற்க வேண்டிய விஷயம். காதலிக்கும்போதே அவர் நமக்கு ஒத்துப் போவாரா மாட்டாரா என்பது தெரிந்துவிடும். ஒத்துவரவில்லை என்றால் பிரேக் அப் செய்து விட்டு வருவது நல்லது எனக் கூறியுள்ளார்கள். அது நல்லது. மொத்தத்தில் படம் எப்படி இருக்கு என்றால், ஹீரோ தவறு செய்தால் அது தவறு இல்லை, என்ன தவறு வேண்டுமானாலும் செய்வான் ஆனால் ஜெயித்து விடுவான் என படம் எடுக்காமல், யார் தவறு செய்தாலும் தண்டனை உள்ளது.

குடும்பத்துடன்: எந்த கஷ்டத்திலும் நேர்மையாக வாழ்வது தான் சரியான வழி என சிறப்பான திரைக்கதை மூலம் படமாக எடுத்துள்ளார்கள். படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஒரு சில காட்சிகள் மட்டும் அனைத்து வயதினரும் பார்க்கும்படி இருக்காது" என கூறியுள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











