Dragon Box Office: 100 கோடி வசூலை கடக்குமா டிராகன்?.. இதுவரை இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா!

சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் மேனன், கே.எஸ். ரவிகுமார், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியான படம் தான் டிராகன். முதல் 3 நாட்களிலேயே அதிரடியாக 50 கோடி வசூலை படம் உலகளவில் கடந்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து இருந்தார்.

ஆனால், அதன் பின்னர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 2வது வார நாட்களில் டிராகன் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் டல் அடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், மீண்டும் வார இறுதி நாட்களில் பிக்கப் ஆக ஆரம்பித்துள்ளது.

Dragon Dragon Box Office Pradeep Ranganathan

இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூலை டிராகன் படம் கடக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை படத்தின் வசூல் எத்தனை கோடி என்பது குறித்தும் இங்கே காணலாம் வாங்க..

80 கோடி வசூல்: பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்ற நிலையில், அவர் நடிப்பில் 2வதாக வெளியான டிராகன் திரைப்படமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடி வசூலை டிராகன் படம் கடந்துள்ளதாகவும் உலகம் முழுவதும் இதுவரை டிராகன் திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை பாக்ஸ் ஆபீஸில் விடாமுயற்சி படத்துக்குப் பிறகு அதிக வசூலை அள்ளிய படமாக டிராகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

100 கோடி கிளப்: வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 2வது வாரமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக டிராகன் திரைப்படம் ஓடினால் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கின்றனர். கயாடு லோஹருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட்டில் கிடைத்து விட்ட நிலையில், டிராகன் படத்தை இந்த வாரமும் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

2 படங்கள்: ஆதி நடிப்பில் வெளியாகி உள்ள சப்தம் மற்றும் ஜீவாவின் அகத்தியா என 2 படங்கள் இந்த வாரம் டிராகன் படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அந்த இரண்டு படங்களும் டிராகன் படத்தின் வசூலை பெரிதாக பாதிக்காது என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X