சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டிராகன்.. நடிகைக்காக பாத்ரூம் கழுவிய அஷ்வத் மாரிமுத்து! எப்போ நடந்துச்சு
சென்னை: டிராகன் படம் கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது. ரசிகர்கள் படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். இப்படியான நிலையில் டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகை ஒருவருக்காக பாத்ரூம் கழுவியது தொடர்பான செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான் என பலரது நடிப்பில் உருவான படம், டிராகன். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இதுவரை ரூபாய் 150 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படம் அஷ்வத் மாரிமுத்துவிற்கு 2வது படம். இந்த படத்திற்கு பின்னர் அவர் சிலம்பரசனின் 51 வது படத்தை இயக்குகிறார். டிராகன் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான், இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

அஷ்வத் மாரிமுத்து: இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் பலரும் படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். மேலும் பலரும் பாராட்டினர். இப்படி இருக்கும்போது, அஷ்வத் மாரிமுத்துவின் இரண்டாவது படமான டிராகன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால், ரசிகர்கள் சிம்புவின் 51 வது படத்தின் மீது அதிக எதிர்பார்ப்போடு உள்ளார்கள்.

டாய்லெட்: அஷ்வத் மாரிமுத்து குறித்து திரைத்துறையில் பேசப்படும் பல விஷயங்கள் பெரும்பாலும் பாசிடிவ்வான விஷயங்களாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அவர் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறிய ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஓ மை கடவுளே படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு ஹோட்டலில் நாங்கள் தங்கினோம். அது சாதாரண சின்ன ஹோட்டல் தான். அங்கு டாய்லெட் சுத்தமாக இல்லை. இதனால் நடிகை ரித்திகா டாய்லெட் போக முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஹோட்டலில் ரூம் பாயும் அப்போது இல்லை. இதனால் அஷ்வத் மாரிமுத்து தானே சென்று அந்த டாய்லெட்டையும் பாத்ரூமையும் சுத்தம் செய்தார் என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











