பேட்டியில் எமோஷனலான அஷ்வத் மாரிமுத்து.. சிலர் அடிக்கனும்னே அடிச்சாங்க.. டிராகன் பட இயக்குநர் பளிச்!

சென்னை: டிராகன் படம் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடி வருகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படம் ரசிகர்களுக்கு கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் ஹிட் படமாக மாறியுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் அஷ்வத் மாரிமுத்து அளித்த பேட்டியில், அவர் எமோஷனலாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த வாரம் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது, அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படம் தான். இந்தப் படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். படத்தில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், வி.ஜே. சித்து, மரியம் ஜார்ஜ், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படம் மிகச்சிறப்பாக வந்ததாலும், மக்கள் மத்தியில் படம் ஒர்க் அவுட் ஆகும் என்பதாலும், படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே, படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

Dragon Ashwath Marimuthu Pradeep Ranganathan

படத்தின் டிரைலர் வெளியான போது, பலரும் டிராகன் படம் சிவகார்த்திகேயனின், டான் படத்தைப் போல் இருக்கும் போலயே என்று விமர்சித்தார்கள். இது மட்டும் இல்லாமல், பலர் பிரதீப் ரங்கநாதன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் படம் வெளியான பின்னர் படத்தின் தன்மை, படம் சொல்லும் விஷயங்களை புரிந்து கொண்ட ரசிகர்கள் படத்தை பாராட்டினர்.

எமோஷ்னல்: இந்நிலையில், படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அளித்த பேட்டியில் எமோஷனலாக பேசினார். அப்போது, " எல்லோரும் சொன்னார்கள், பூசணிக்காயை மறைத்து வைத்துள்ளார்கள். ஆனால் அதே பூசணிக்காயை எடுத்துவந்து, திஷ்டி சுத்திப் போடும் அளவுக்கு திருஷ்டி வந்துவிட்டது என தொகுப்பாளர் கூறினார். அதற்கு அஷ்வத் மாரிமுத்து உடனே, இது நல்லா இருக்கு, நல்லா இருக்கு எனக் கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் எமோஷனலாக பேசினார்.

ரசனை: படம் ரிலீஸ்க்கு முன்னர் டிரைலரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் ஒரு சிலர் தான் நம்மை வேண்டும் என்றே அடித்தார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்க பார்க்க, ஒரு கட்டத்தில் உண்மையான கதையைச் சொல்லி விடலாமா என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் ரசிகர்களின் ரசனை கெட்டுவிடக் கூடாது என்பதால், கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

பொறுப்பு: மேலும் படம் ரிலீஸ் ஆன பின்னர் பலரும் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். படம் மக்களுக்குப் பிடித்துப்போனதால் படத்தை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள், அதன் பின்னர் தியேட்டரில் இருந்து வெளியே வந்தும் பொறுப்பாக நடந்து கொண்டார்கள். சிலர் வீடியோக்களை அப்லோட் செய்தார்கள். ஆனால், எங்கள் ஐ.டி. விங் அவற்றை எல்லாம், உடனுக்குடன் நீக்கியது" என எமோஷனலாக பேசினார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X