Dragon Review: டிராகன் படம் கெத்தா? வெத்தா? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்!

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் நடித்துள்ளனர். மேலும், சினேகா, மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிகேத் பொம்மிரட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்..

காலை 9 மணிக்கு வெளியான டிராகன் படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், டிராகன் திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். ஒரு நல்ல பையன் கெட்ட பையனாக மாறினால் என்னாகும். கடைசி 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சி மாஸ். சமுதாயத்திற்கு நல்ல செய்தியை இயக்குநர் சொல்லி இருக்கிறார். இந்த ஆண்டில் 3வது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் இது என கருத்தை பகிர்ந்துள்ளார்.

Dragon bayilvan ranganathan review

டிராகன் படத்தின் கதை: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன், டிராகன் படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார். கல்லூரியில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அமர்க்களம் செய்து கொண்டு இருப்பவர் தான் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன். இவர் வி.ஜே,சித்து மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கல்லூரியில் ஆட்டம் பாட்டம் அலப்பறை செய்து கொண்டு இருக்கிறார். இவரை பார்த்த அனைவருமே நீ உருப்படமாட்ட, நீ தேறமாட்ட என்று விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட பிரதீப் ரங்கநாதன் இப்படியே சென்றால், வாழ்க்கை வீணாக்கி விடும் என்ற நினைத்து வீறு கொண்டு எழுந்து வாழ்க்கையில் நான் ஜெயித்து காமிப்பேன் என்று சபதம் எடுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. பிரதீப் வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லை என்பது தான் டிராகன் திரைப்படத்தின் கதை.

நல்ல கருத்து: இந்த திரைப்படம் அனைவருக்கும் பொதுவான ஒரு திரைப்படமாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, எனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தான் படமாக எடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். அப்படி என்றால் அஸ்வத் மாரிமுத்து கல்லூரியில் படிக்காத மாணவராக இருந்து இருக்கிறார் என்பது தெரிகிறது. படிப்பதனால் அறிவு வளர்ந்துவிடாது. படிப்பிற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை அஸ்வத் மாரிமுத்து தெளிவாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார்.

Dragon bayilvan ranganathan review

மாணவர்களுக்கு பிடிக்கும்: படத்தின் ஒளிப்பதிவு, பாடல், காமெடி என அனைத்தும் சிறப்பாக உள்ளது. டிராகன் நடனம் எப்படி நம் மனதை கவருமோ அப்படி நம் மனகதை கவர்ந்துள்ளது டிராகன் படம். குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும். அதே போல பிரதீப் நடித்த லவ் டுடே படம் போல, இப்படம் இருக்கும் என்று சொல்ல முடியாது அது ஜாலியான திரைப்படம், இப்படம் ஒரு பீல் குட் மூவி. இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு மனதை கவர்ந்து விட்டார் அஸ்வத் மாரிமுத்து, படத்தை இளசுகள் கொண்டாடி வருகின்றனர் என பயில்வான் ரங்கநாதன் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

Dragon bayilvan ranganathan review

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X