Dragon Fans Review: சொல்லி அடிச்ச அஸ்வத்.. பாராட்டு மழையில் பிரதீப்.. டிராகன் ரசிகர்கள் விமர்சனம்!
சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே டிராகன் படம் குறித்த கருத்துகள் தான் குவிந்து வருகிறது. வழக்கமாக பெரிய கவனத்தை ஈர்த்த படம் என்றால், அது குறித்து படக்குழுவினர் தரப்பில் எப்போதும் ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால் டிராகன் படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்தது. இது திரைத்துறையினருக்கு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் பிரதீப் ரங்கநாதனுக்கு இது இரண்டாவது படம் என்பதுதான் முக்கிய காரணமாக இருந்தது. படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பலருக்கும் படம் மிகவும் பிடித்துப் போனதால் ரசிகர்கள் படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் அனுபமா கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயுள்ளார். படம் முழுவதும் வரவில்லை என்றாலும் படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், படத்தின் கதை, படத்தில் இடம்பெறும் காட்சிகள் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கும். அனுபமா மற்றும் கயாடு லோஹர் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயுள்ளார்கள். கதையை அஸ்வத் மாரிமுத்து சிறப்பாக உருவாக்கியுள்ளார். லவ் டுடே படத்திற்கு பின்னர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் தன்னை ஹீரோவாக நிரூபித்துள்ளார். படம் பிளாக் பஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு இணைய வாசி, " படத்தின் கதையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் ஒரு புதிய ஹீரோ பிறந்துவிட்டார் ( பிரதீப் ரங்கநாதனைக் குறிப்பிடுகிறார்) மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்திப் போயுள்ளார்கள். ஹர்ஷத் கான் சிறப்பாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் செம. டைட்டில் கார்டு, இடைவேளை, பிரேமம் ரெஃபரன்ஸ், பிறந்த நாள் ஆகியவை தியேட்டரில் சூப்பராக ஒர்க் - அவுட் ஆகியுள்ளது. வொர்த் டூ வாட்ச்" என பதிவிட்டுள்ளார்.

சொல்லி அடிச்சு: அதேபோல் மற்றொரு ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மொத்த படத்தையும் சுமக்கிறார். அவரது காமெடி, மற்றும் டைமிங் சிறப்பு. கிளைமேக்ஸில் எமோஷனலாக பின்னி பெடல் எடுத்துள்ளார்கள். அஸ்வத் மாரிமுத்து சொல்லி அடிச்சிருக்காரு. ஓ மை கடவுளே படத்திற்கு பின்னர் மற்றொரு ஹிட் படத்தை கொடுத்துள்ளார். எஸ்டிஆர் 51 படத்திற்காக மரண வெய்ட்டிங்" என பதிவிட்டுள்ளார்.

தியேட்டரிக்கல்: அதேபோல் மற்றொருவர் கூறும்போது, படம் பக்கா தியேட்டரிக்கல் படமாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் மீண்டும் வென்று காட்டியுள்ளார்கள். மற்றொரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் சூப்பர். முதல் பாதி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் என்றாலும் போர் அடிக்காத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றபடி காட்சிகளும் அமைத்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசை எல்லாம் அசத்தலாக கொண்டு போயுள்ளார்கள்.

ஹிட்: மற்றொரு ரசிகர் கூறும்போது, படத்தின் முதல் பாதி அட்டகாசமான காமெடி காட்சிகளால் நிறைந்துள்ளது. இரண்டாம் பாதி எமோஷ்னல் காட்சிகளால் பக்காவாக உள்ளது. ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் நடிப்பு படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. மிஸ்கினின் கதாபாத்திர வடிவமைப்பு, அதை அவர் வெளிப்படுத்திய விதம் அருமை. மற்ற துணை நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். படம் முழுவதும் பல சர்ப்ரைஸ் எலமென்ட்ஸ் உள்ளது. படத்தின் இண்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் அருமை. மொத்தத்தில் படம் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட் படம்" என பதிவிட்டு உள்ளார்.

மகிழ்ச்சி: ரசிகர்கள் தொடர்ந்து படம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களைத் தெரிவித்து வருவதால், வார இறுதி நாட்களில் படத்திற்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வசூலிலும் எதிரொலிக்கும் என்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.




Click it and Unblock the Notifications











