Dragon Twitter Review: ஜாலியான படம்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த வெற்றி.. டிராகன் ட்விட்டர் விமர்சனம்

சென்னை: ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள டிராகன் படம் இன்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி உள்ளது என ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அது குறித்து காணலாம்.

Dragon Pradeep Ranganathan Dragon Twitter Review

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கௌதம் வாசுதேவ் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியானபோது ரசிகர்கள் பலரும், சிபி சக்கரவர்த்தி இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் படத்தைப் போல் உள்ளது என கருத்து தெரிவித்தனர். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Dragon Pradeep Ranganathan Dragon Twitter Review

சிரிப்பு: படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர் ஒருவர் படத்தில் டிராகன் கதாபாத்திரத்திற்கு பிரதீப் ரங்கநாதன் கச்சிதமாக பொருந்தி போயுள்ளார். அவரது காட்சிகளில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. படம் சிறப்பாக ஒர்க் -அவுட் ஆகியுள்ளது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர் படத்தின் முதல் 30 நிமிடத்தில் அனுபமா மற்றும் பிரதீப் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. படத்தில் முதல் பாடலாக, சிம்பு பாடிய ஏன்டி விட்டு போன பாடல் தான் வருகிறது. முதல் 30 நிமிடங்கள் அட்டகாசமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Dragon Pradeep Ranganathan Dragon Twitter Review

டிராகன் ஃபயர்: அதேபோல் மற்றொரு ரசிகர், படத்தின் முதல் 10 நிமிடம் சிறப்பாக உள்ளது. முதல் பாதி படமுமே அருமையாக உள்ளது. அதேபோல் கடைசி 20 நிமிடத்தில் சிறப்பான சமூக கருத்தை கூறியுள்ளார்கள். இந்த ஆண்டின் மூன்றாவது வெற்றிப் படமாக டிராகன் இருக்கும் எனக் கூறியுள்ளார். ஒரு ரசிகர் பிரதீப் குறித்து, பிரதீப் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில், முதல் ஸ்டெப் மட்டும் தான் கஷ்டமா இருக்கும் எனக் கூறினார். அவருக்கு இந்தப் படமும் வெற்றிப் படமாக மாறும். குடும்பத்தில் ஒருவர் வென்றதைப் போல் உள்ளது என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். பெரும்பாலான ரசிகர்கள் படம் கலகலப்பாக இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். படம் பலருக்கும் பிடிக்கும். இந்த வீக் எண்டில் பார்க்க தரமான படம் என பதிவிட்டு வருகிறார்கள்.

Dragon Pradeep Ranganathan Dragon Twitter Review

இடைவேளை: மற்றொரு ரசிகர் கூறும்போது படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. இடைவேளை காட்சி, கடந்த சில மாதங்களாக வெளியான படங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பான இடைவேளை காட்சியாக உள்ளது. படத்தை தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளார் பிரதீப். அனுபமாவிற்கு அந்த அளவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்துள்ளார். மன்மதனைப் போல் இந்தப் படத்தில் கதாநாயகனின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பார்ப்பதற்கு வேற வெலவில் உள்ளது என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Dragon Pradeep Ranganathan Dragon Twitter Review

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X