twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திட்டமிட்டது 180 நாள்.. ஆனால் ஒரே வாரத்தில் முடிந்தது.. ட்ராமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்!

    |

    சென்னை: பொல்லாதவன் படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கிஷோர், தனது முதல் தமிழ் படத்திலேயே சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார்.

    வெண்ணிலா கபடி குழு, தோரணை, முத்திரை, ஆடுகளம் என்று தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து பல ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் இவர் நடித்துள்ள ட்ராமா படத்தை பற்றியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளது.

    சீரியல் பரிதாபங்கள்..ஐஏஎஸ் தேர்வு இண்டர்வியூ என நடக்கும் காமெடி காட்சி..சமூக வலைதளத்தில் கிண்டல்சீரியல் பரிதாபங்கள்..ஐஏஎஸ் தேர்வு இண்டர்வியூ என நடக்கும் காமெடி காட்சி..சமூக வலைதளத்தில் கிண்டல்

    சிறந்த வில்லனாக கிஷோர்

    சிறந்த வில்லனாக கிஷோர்

    பொல்லாதவன், ஆடுகளம் என்று சொன்னாலே நடிகர் கிஷோர் நினைவுக்கு வரும் அளவுக்கு தமிழ் திரையுலகில் சிறந்த வில்லனாக இருந்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் தற்போது மிரட்டி வருகிறார் பிளட் மணி, டைரி போன்ற படங்கள் சமீபத்தில் இவன் நடிப்பில் வெளியானது. தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார் நடிகர் கிஷோர்.

    வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

    வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

    சமீபத்தில் நடிகர் கிஷோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் ட்ராமா. இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ட்ராமா திரைப்படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வைப் 3 ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்க சசிகலா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகின்றனர். படம் ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் இந்த சூழ்நிலையில், இப்படத்தை பற்றியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிஷோரை பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளது.

    1 வாரத்தில் முடித்த ரிகர்சல்

    1 வாரத்தில் முடித்த ரிகர்சல்

    இப்படத்தில் ஜெய்பாலா நாயகனாகவும், காவியா பெல்லு நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த டிராமா திரைப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக படக்குழு, படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் நடிகர் கிஷோர் தனது ரிகர்சலை வெறும் ஏழு நாட்களில் முடித்து பட குழுவினரையும், சக நடிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இரவு 2 மணிக்கு அடுத்த காட்சிக்கான வசனங்களையும் பேசி ரிகர்சல் செய்து கொண்டு இருந்தாராம் நடிகர் கிஷோர்.

    படக்குழுவின் எதிர்பார்ப்பு

    படக்குழுவின் எதிர்பார்ப்பு

    ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு தேவையான உணவுகளை தானே சமைத்து சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்வது என்று ஷூட்டிங் ஸ்பாட்டே அலறும் அளவிற்கு இருந்துள்ளார். தனது முதல் படத்திலேயே சிறந்த வில்லன் என்ற விருதை தட்டிச் சென்ற கிஷோர் அடுத்தடுத்து வெளிவந்த படங்களின் மூலம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்து இருந்தார். அதேபோல் இவர் நடித்த பல படங்களும் வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், இந்தப் படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Kishore, who made his debut as a villain in Polladhavan, bagged the best villain award in his first Tamil film. He Played his Part Well in Venilla Kabbadi Kuzhu, Thoranai, and Aadukalam Movies. Recently, interesting information about the drama film in which he has acted and what was actually happened at the shooting spot has been Leaked out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X