குவிந்த பெண்கள்.. வசூலை அள்ளிய திரௌபதி.. இயக்குனர் ஹேப்பி !
சென்னை: சுமார் ஆறு கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாம் திரௌபதி திரைப்படம்.
Recommended Video
இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திரௌபதி. பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் இப்படம் வெளியானது. நாடகக்காதல் என்ற சமீப கால விவகாரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது திரௌபதி.

ரிஷி, ஷீலா, கருணாஸ் போன்ற பலர் நடித்து மோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் தமிழில் வெளியான முதல் க்ரவ்டு ஃபன்டிங் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது இப்படம்.
பல அரசியல் பிரமுகர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர் மற்றும் முதல் நாளே இப்படம் நல்ல வசூலை சந்தித்தது. சுமார் ஒரு கோடிக்கும் கீழ் தான் இந்த படத்தின் பட்ஜெட், முதல் நாள் இப்படம் 1.50 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுடன் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு பெற்றோரின் ஆதரவும் அதிகம் கிடைத்துள்ளது.
தர்பார் படத்திற்கு பிறகு முதல் நாள் வசூல் மற்றும் ஒரு நல்ல மார்கெட் இந்த படத்திற்கு தான் என்று ஒரு பிரபல திரையரங்கம் சமீபத்தில் ஒரு டிவிட்டை பதிவிட்டது. தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் முதல் மூன்று நாளில் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாளில் 55 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்று இயக்குனர் மோகன் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை பலித்துள்ளது, அவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











