அடங்காத திரெளபதி.. அப்படி என்னதான் இருக்கு.. அதகளமாகும் சமூக வலைதளங்கள்!
சென்னை : திரௌபதி படத்தின் முன்னோட்டம் முதலே படத்தை பற்றிய எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது என்று கூறலாம். தற்போது திரௌபதி படம் வெளியாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எங்கும் இணையவாசிகளுக்கு இடையே பனிப்போர் மூண்டிருக்கிறது என்றும் நேரடியாக சொல்லலாம்.
இதனிடையில் திரௌபதி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படம் ஒரு சமூகத்தை பற்றியே பேசியிருக்கிறது. மேலும் ஒருவர் செய்த தவறை வைத்து மொத்த சமூகத்தையும் குறைக்கூறி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். இதற்கான எதிர் அரசியலை கூடிய சீக்கிரம் அவர்கள் காண்பார்கள். கர்ணன் வருவான் கர்ணன் பேசுவான் என்று மிக துணிச்சலுடன் திரௌபதி ரசிகர்களின் முன்னிலையிலே அந்த ரசிகர் பேசி சென்றிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

படம் நாடக காதலுக்கு எதிரான படம் என்றும் ஜாதியை பற்றிய எந்த விசயமும் இல்லை என்ற கருத்துகள் படம் பார்த்தவர்களிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்த இளைஞரின் கருத்து சற்று உற்று நோக்க வைத்திருக்கிறது திரௌபதி படத்தின் கரு என்ன அந்த படம் பேச வந்த விசயம் என்னென்ன என்பதனை தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள் .
படத்தில் பல காட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாக தாக்கி பேசிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதை எடுத்து முன் வைத்துள்ள நெட்டிசன்கள் இதற்காக தான் தாங்கள் திரௌபதி படத்தை எதிர்ப்பதாக கூறினார்கள். இதே நேரத்தில் திரௌபதி ஆதரவாளர்கள் படம் நாடக காதலை எதிர்த்தும் பல பெற்றோர்களின் ஏமாற்றத்தையுமே பேசியிருக்கிறது இது பாராட்டபட வேண்டிய படம் தான் என்று கூறியுள்ளனர் .

திரௌபதி படத்தில் நாடக காதலுக்கு எதிராக சரியாக பேசியிருக்கிறார்கள் என்ற விசயம் ஒருபுறம் இருந்தாலும் கிரமாத்துக்குள்ள யாரு வரணுங்கிறத நாங்கதான் முடிவு பண்ணுவோம்' மற்றும் 'ஜாதி பார்க்காம பெண்ணை கட்டி வச்சுட்டேன்' போன்ற சாதிய மனநிலை கொண்ட வசனங்கள் நேரடியாக வைத்திருப்பது திரௌபதி பக்கத்தின் நியாத்தை சற்று கீழே தவறவிட்டதாக விமர்சகர்களிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
ஒரே நேரத்தில் ஜாதிக்கு எதிராக கன்னி மாடமும் அதே நேரத்தில் ஜாதியை ஆதரித்து திரௌபதியும் வந்திருப்பது உண்மையிலே இணைய வாசிகளின் இடையில் எதிர் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவாதங்களில் கர்ணன் பெயரும் அடிப்பட்டிருப்பது ரசிகர்களின் விவாதங்களை சூடுபிடிக்கவைத்து இருக்கிறது . தற்போதைய சினிமா சூழலில் இணையம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இந்த விவாதங்கள் திரௌபதி படத்தை பாதிக்குமா ஜெயிக்க வைக்குமா என்பதனை வரும் வாரங்களில் காணலாம்.


Click it and Unblock the Notifications











