twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகாபாரத போர் போல 18 நாட்களில் முடிந்த திரெளபதி.. இயக்குநர் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

    |

    சென்னை: கொரோனா தாக்குதல் காரணமாக தமிழ்நாட்டிலும் திரையரங்குகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

    கடந்த மாத இறுதியில் வெளியான திரெளபதி திரைப்படம் நேற்றுடன் திரையரங்கில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் ஜி. மோகன் ட்வீட் போட்டுள்ளார்.

    நடிகர் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரெளபதி திரைப்படம் சர்ச்சைகளுக்கு நடுவே வசூலையும் குவித்துள்ளது.

    18 நாட்கள்

    "Corona காரணமாக நேற்றுடன் திரையரங்குகளில் #திரெளபதி பட காட்சிகள் முடிந்தது.. 18 நாட்கள்.. நூறு திரையரங்குகளில்.. மாபெரும் சரித்திர வெற்றியாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்.. பாதம் தொட்டு நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.. இனி அடுத்த பட வேலைகள் ஆரம்பமாகும்.. நன்றி" என திரெளபதி பட இயக்குநர் ட்வீட் போட்டுள்ளார்.

    மகாபாரத போர்

    மகாபாரத போர்

    வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதத்தில் திரெளபதியால் தொடங்கிய குருக்‌ஷேத்ர போர் 18 நாட்களில் நிறைவடையும். அதேபோல, தற்போது திரெளபதி என்ற தலைப்பிடப்பட்டுள்ள திரைப்படமும் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியுள்ளதை ரசிகர்கள் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். வழக்கம் போல, ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களும் கமெண்ட் செக்‌ஷனை கலவர பூமியாக மாற்றியுள்ளன.

    ஜாதி வைரஸ்

    ஜாதி வைரஸ்

    "கொரோனா வைரஸ் வந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது... இந்த நிலையில் மக்களிடையே ஜாதி வைரஸை பரப்பும் இவனை என்ன செய்வதென்றே தெரிய வில்லை.... மனிதனாக இருந்தால் இந்த நிலையிலும் ஜாதிய வன்மம் இருக்காது" என திரெளபதி படத்துக்கு எதிரான கருத்துக் கொண்ட ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

    நூறு நாள்

    நூறு நாள்

    "இல்லீன்னா மட்டும் நூறு நாள் ஓடி நொட்டியிருக்கும் பாரு" என மற்றொரு நெட்டிசன் திரெளபதி இயக்குநர் பதிவிட்ட ட்வீட்டை வச்சு விளாசி தள்ளியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த வாரம் வெளியான படங்களும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஏற்கனவே போதுமான வசூலை தாங்கள் ஈட்டிவிட்டோம் என்றும், பாதிப்பு ஒன்றும் இல்லையென்றும் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

    நாடக காதல்

    நாடக காதல்

    "#Draupathi படம் வெற்றியை விட நாடக காதல் அம்பலம் வெளி வந்துவிட்டது... உதாரணமாக இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தது.. அதுதான் #Draupathi படத்தின் உண்மையான வெற்றி...வாழ்த்துக்கள் அண்ணா... அடுத்த படைப்புக்கு வாழ்த்துக்கள்" என இயக்குநர் ஜி மோகனுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவாகி உள்ளன.

    English summary
    Due to Coronavirus Tamil Nadu theaters also shut down from yesterday. Draupathi movie running also come to an end. Director Mohan G tweeted about the 18 days successful running.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X