திரௌபதி 2: சின்மயி குரலே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த மோகன் ஜி!

சென்னை: திரௌபதி 2 படத்தில் "எம்கோனே" என்ற பாடலை சின்மயி பாடி இருந்தார். இது மோகன் ஜியின் படம் என தெரிந்து இருந்தால், நான் பாடலை பாடி இருக்கவே மாட்டேன் என்று சின்மயி கூறியது சர்ச்சையான நிலையில் தற்போது : திரௌபதி 2 படத்தில் படத்தில் இருந்து சின்மயி பாடிய பாடல் நீக்கப்பட்டுள்ளது.

திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோகன் ஜி, திரௌபதி 2 படத்தை எடுத்துள்ளார். 14 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாகும், ஹொய்சால அரசர்களின் இரத்தக்கறை படிந்த ஆட்சி, தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா,அருணோதயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரௌபதி 2: இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து "எம்கோனே" என்ற இப்பாடல் சின்மயி பாடி இருந்தார். இந்த பாடல் இணையத்தில் வெளியான போது, சின்மயி தனது எக்ஸ் தளபக்கத்தில், 'எம்கோனே' பாடலுக்காக எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இது மோகன் ஜியின் படம் என்று தெரிந்திருந்தால் இந்த பாடலை பாடி இருக்க மாட்டேன், ஏனென்றால். சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என பதிவிட்டு இருந்தார்.

Draupathi 2 Mogan g Chinmayi 2
Photo Credit:

கடுப்பான மோகன் ஜி : சின்மயின் இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாள நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பிய மோகன் ஜி, இந்த சித்தாந்தத்தில் இருப்பவரின் படத்துக்கு பாடமாட்டேன் என்று சின்மயி எங்கேயாவது சொல்லி இருந்தால், நிச்சயமாக நான் அவரை என் படத்தில் பாட அழைத்து இருக்க மாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு ஒரு தெளிவு வேண்டும், எதற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். உங்களுக்கு யாராவது அழுத்தம் கொடுத்தார்களா.. ஏன் கொடுத்தார்கள் என்பதை விளக்க வேண்டும் என கேட்டு இருந்தார். சின்மயின் இந்த செயல் இணையத்தில் பேச பொருளாகி பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சின்மயி குரல் நீக்கம்: இந்நிலையில் திரௌபதி 2 படத்தில் இருந்து சின்மயி பாடல் நீக்கப்பட்டுள்ளது. சின்மயி பாடிய பாடலை மற்றொரு பாடகரை வைத்து பாட வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் இருந்து அவரது குரல் முழுவதுமாக நீக்கப்படும் என்றும், ஜனவரி இறுதியில் திரௌபதி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியீட்டுத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X