twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரௌபதியில் அந்த வார்த்தைக்கு கத்தரி போட்ட சென்சார்.. அன்கட் வர்ஷனை ரிலீஸ் செய்த இயக்குநர் மோகன்ஜி!

    |

    சென்னை: திரௌபதி படத்தில் சென்சார் கட் செய்யப்பட்ட வார்த்தையுடன் கூடிய காட்சியை இயக்குநர் மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

    Recommended Video

    Draupathi Collection | Mohan G | Twiter Fight

    திரௌபதி படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் 330 தியேட்டர்களில் படம் ரிலீஸானது.

    இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷியும் ஷீலாவும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். நாடகக்காதல் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    படத்திற்கு பல்வேறு சமூகத்தினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. பல தரப்பில் இருந்தும் படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. படத்தில் இடம் பெற்றிருந்த வசனங்களும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை சீண்டும் வகையில் இருந்ததால் படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு வலுத்தது.

    10 கோடிக்கு மேல்

    10 கோடிக்கு மேல்

    இந்நிலையில் பல தடைகளை தாண்டி படம் கடந்த வாரம் ரிலீஸாகி இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்திருக்கிறது. படம் சமூகம் சார்ந்த பிரச்சனையை சொன்னதால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நிலையில் தற்போது வசூலை குவித்து திரைத்துறையினர் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

    குலம் கோத்திரம்

    படம் ரிலீஸ் ஆன போதே மொத்தம் 16 இடங்களில் சென்சார் குழு கத்தரி போட்டதாக தகவல் எழுந்தது. இந்நிலையில் படத்தில் ஒரு வசனத்திற்கு சென்சார் போர்டு கத்தரி போட்ட காட்சியை படத்தின் இயக்குநரான மோகன் அன்கட் வெர்ஷனை ரிலீஸ் செய்திருக்கிறார். அதில் படத்தில் ஹீரோ கோவிலில் தனது குலம் கோத்திரத்தை கூறும் வசனம் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த வசனம் முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    எதிரானது

    இதனை பார்த்த நெட்டிசன்கள், திரௌபதி படத்திற்கு ஆதரவாக கமென்ட் பதிவிட்டுள்ளனர். ஒருவர் தனது குலத்தை சொல்லுவதை கட் பண்ணியது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. மோகன் ஏன் அனுமதித்தீர்கள் புரோ. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட குலம் தானே சொல்தானே. அவ்வளோ பயமா இவர்களுக்கு ஒரு சமுதாய மக்களின் சுதந்திரத்துக்கு கேள்வி? உரிமை? என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    சென்சார் கட்டா?

    மோகன் வெளியிட்ட வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணா அடுத்த வீடியோ சீக்கிரம் விடுங்க.. என்று கூறியிருக்கிறார். இதில் ஒருவர் தன் குலத்தை சொல்வது எல்லாம் சென்சார் கட்டா.. கொடுமை.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். சத்ரியன்னு ரெண்டு படம் எடுத்திருக்காங்க தமிழ் சினிமாவுல. சத்திரியன் வார்த்தைக்கு சென்சார் கட்!!!?? என்று கேள்வி குறியுடன் பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Draupathi director Mohan G has released uncut version of movie. Netizens oppossing for censoring the dialogue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X