நல்லாத்தானே இருக்கு.. அந்த படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய திரெளபதி பட இயக்குநர்!

சென்னை: சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் 'திரெளபதி' இயக்குநர் ராமாயணம் படத்தின் ஃபேன் மேட் போஸ்டரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நாடக காதலை மையமாக வைத்து தல அஜித்தின் மச்சான் ரிச்சர்டு ரிஷியை வைத்து 'திரெளபதி' படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.

ஆனால், அந்த படத்திற்கு ஆதரவான கருத்துக்களும், எதிரான கருத்துக்களும் சமூக வலைதளத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சண்டை போட ரெடி

சண்டை போட ரெடி

திரெளபதி படம் குறித்து பிரச்சனை கிளப்புவர்களுக்கு எதிராக எந்தளவுக்கு இறங்கி சண்டை செய்ய முடியுமோ அந்தளவுக்கு இறங்கி சண்டை செய்யும் ஆற்றல் கொண்டவர் ஜி. மோகன். அவர் ஒரு டிவீட் போட்டாலே, அதன் கீழ் வரும் கமெண்ட்டுகளை படித்தால் கண்டிப்பாக அவரை கழுவி ஊற்றியும், புகழ்ந்தும் கமெண்ட்டுகள் குவிந்து கிடக்கும்.

சமீபத்தில் செம டிரெண்டிங்

சமீபத்தில் செம டிரெண்டிங்

தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், உலக சாதனையையும் சமீபத்தில் படைத்து செம டிரெண்ட் ஆனது. உடனே அந்த படத்தை இயக்குநர் ராஜமெளலி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைரலாக எழுந்தது.

மோகன் டிவீட்

மோகன் டிவீட்

இந்நிலையில், மகேஷ் பாபுவை ராமராக வடிவமைத்து ராமாயணம் படத்தை ராஜமெளலி இயக்கப் போவதாக வெளியான ஃபேன் மேட் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, செம போஸ்டர் என்றும், மகேஷ் பாபு ராமர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்றும் திரெளபதி இயக்குநர் மோகன் ஜி டிவீட் போட்டுள்ளார்.

Recommended Video

Mahesh Babu Fun with Son Gautam | Sarileru neekkevaru, Spyder • Quarantine
ஆந்திரா காரன்ட்ட போயி

ஆந்திரா காரன்ட்ட போயி

நாம் முன்பே குறிப்பிட்டது போல, இயக்குநர் மோகனின் இந்த டிவீட்டுக்கு கீழே, முதல் கமெண்ட்டாக, "இங்க கண்டமானது பத்தலைன்னு, ஆந்திரா காரன்ட்ட போயி காண்டமாக போறீங்களா" என ஒரு நெட்டிசன் பங்கமாக கலாய்த்துள்ளார். இந்துத்துவா ஆதரவு தெரிவித்தே அவர் இந்த படத்துக்கு சப்போர்ட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

சீதாவாக இவர்

சீதாவாக இவர்

ராஜமெளலி இயக்கத்தில் ராமாயணம் உருவானால், ராமராக மகேஷ் பாபுவும் அவருக்கு ஜோடியாக சீதாவாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க வேண்டும் என டோலிவுட் ரசிகர்கள் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மோகனின் இந்த டிவீட்டுக்கு கீழே அரசியல் ரீதியான சர்ச்சையும் சண்டையும் ஒரு பக்கம் களைகட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X