சாதி இருக்குன்னு சொல்றவங்கள நம்பு.. ஆனா அப்படி சொல்றவங்கள நம்வே நம்பாத.. பிரபல இயக்குநர் அதிரடி!

சென்னை: பிரபல இயக்குநர் சாதிக்குறித்து நெட்டிசன் ஒருவருக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார்.

திரௌபதி படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் மோகன் ஜி. நாடக் காதலை தோலுரித்துக் காட்டி எடுக்கப்பட்ட படம் திரௌபதி.

Draupathi director Mohan G response to a netizen

50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலை அள்ளியது. க்ரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட இப்படம், 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

இந்தப் படத்தின் மூலம் பல்வேறு சமூதாயத்தை சேர்ந்த மக்களின் ஆதரவை பெற்றார் மோகன் ஜி. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

இருப்பினும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள மோகன் ஜி, சாதிக்குறித்து அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தை பற்றி படம் எடுக்க வேண்டும் என டிவிட்டியிருந்தார்.

https://twitter.com/mohandreamer/status/1257147474961022977

அதனை பார்த்த மோகன்ஜி, சாதி இருக்குன்னு சொல்றவங்கள நம்பு...சாதி இல்லவே இல்லன்னு சொல்றவங்களையும் நம்பு.. ஆனா சாதியை ஒழிப்பேன்னு சொல்லிட்டு அடுத்தவன் சாதியை மட்டும் ஒழிக்க துடிக்கிறான் பாரு.. அவனை நம்பவே நம்பாதே..
விஷம் விஷம் விஷம்.. அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X