twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட இதுதாங்க வழி.. பெண்களுக்கு இப்படி ஐடியா கொடுத்த 'திரெளபதி' இயக்குனர்!

    By
    |

    சென்னை: டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடுவதற்கு திரெளபதி பட இயக்குனர் கொடுத்துள்ள ஐடியா பரப்பரை ஏற்படுத்தி வருகிறது.

    Recommended Video

    நடிகை ஜோதிகாவை மறைமுகமாக திட்டிய திரெளபதி இயக்குனர்

    ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ், நிஷாந்த், ஜீவா ரவி உட்பட பலர் நடித்த படம், திரெளபதி. இதை மோகன் ஜி என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.

    கொரோனா உதவி.. களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #CoronaReliefByRAJINIsoldiersகொரோனா உதவி.. களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #CoronaReliefByRAJINIsoldiers

    இவர், ஏற்கனவே 'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் பிரஜின், அஸ்மிதா, ரிச்சர்ட் ரிஷி, கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தார்.

    குறைந்த பட்ஜெட்

    குறைந்த பட்ஜெட்

    பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் படமான இது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி, கவனிக்கப்பட்டது. இதையடுத்துதான் அவர் திரெளபதி படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    உங்களால் முடியும்

    உங்களால் முடியும்

    இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார் மோகன் ஜி., சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர், டாஸ்மாக்கை ஒழிக்க ஒரு ஐடியா கொடுத்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் 'பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள். உங்கள் கோரிக்கை, அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

    எப்படி மூடுவார்கள்?

    எப்படி மூடுவார்கள்?

    இதையடுத்து #NoMoreTASMAC என்ற இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது. இந்த ஹேஷ்டேக்கில் ஏராளமானவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசு அதை ஏற்காது என்றும், அதுதான் அரசுக்கு வருமானமே, அதை எப்படி மூடுவார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் நிச்சயம் முதல்வர் செவி கொடுப்பார்' என்று மோகன் ஜி கூறியுள்ளார்.

    ஊதியம் தவறினால்

    ஊதியம் தவறினால்

    அதற்கு ஒருவர், 12 லட்சம் அரசு ஊழியர்கள், 7 லட்சம் pensionவாதிகள், மாதம் பிறந்தால் 50 ஆயிரம் கோடி முதல் வைக்க வேண்டும் சார். #குறிப்பு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தவறினால் ஆட்சி Dismissed ஆக வாய்ப்புகள் உள்ளன' என்று கூறியிருந்தார்.

    முக்கிய எண்ணம்

    முக்கிய எண்ணம்

    இதற்கு பதிலளித்துள்ள மோகன் ஜி. அத்தனை tasmac கடைகளையும் organic market, merchant store, flower bazzar, spices market, ஆக மாற்றினால் வருமானம் வரும். அரசாங்கத்திற்கு மாற்ற வழி தெரியும். யார் வேலை வாய்ப்பையும் கெடுக்கும் எண்ணம் இதில் இல்லை. பலரின் நலனே முக்கிய எண்ணம்' என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.

    மனம் மாறுங்கள்

    மனம் மாறுங்கள்

    மற்றொரு பதிவில், இன்று கையில் சேமிப்பு இல்லாமல் துன்பப்படும் பலரின் உண்மையான காரணம் இந்த #TASMAC தான். உங்களை பிச்சைக்காரன் என சிலர் கூறுவதற்கு காரணமும் இந்த TASMAC தான்.. உடல் வலிக்கு இது தீர்வு அல்ல.. மனம் மாறுங்கள்.. வாழ்க்கை மாறும்' என்று கூறியுள்ளார். இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    English summary
    Draupathi director mohan g's latest tweet about Tasmac goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X