கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க.. அந்த ட்வீட்டுக்கு இப்போ பதிலடி கொடுத்த திரெளபதி இயக்குநர்!

சென்னை: குப்பை படம் என திரெளபதி படம் குறித்து விமர்சித்த மூடர் கூடம் இயக்குநர் நவீனுக்கு தனது ட்வீட் மூலம் திரெளபதி இயக்குநர் பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

BJP Gayathri blind support to Draupathi | Pa. Ranjith Tweet

இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரெளபதி திரைப்படம், சமூக வலைதளத்தை காரசாரம் ஆக்கியுள்ளது.

இந்த படத்தில் ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார்.

நாடக காதல்

நாடக காதல்

நாடக காதலை மையப்படுத்தி உருவாகி உள்ள திரெளபதி படத்துக்கு, எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகி வருகின்றன. எதிர்பார்த்ததை விட திரெளபதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்து சக்சஸ் பார்ட்டியையும் வைத்துள்ளது. மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

குப்பை படம்

குப்பை படம்

திரெளபதி படம் குறித்து, மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீனிடம் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லணுமா?" என நவீன் பதிவிட, திரெளபதி படத்தின் ஆதரவாளர்கள், இயக்குநர் நவீனின் கமெண்ட்டுக்கு கீழே மிகப்பெரிய வார்த்தை போரையே நடத்தினர்.

மோகன் பதிலடி

திரெளபதி திரைப்படம் வெளியாகி ஒரு தரப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் 5 கோடிக்கும் மேலான வசூலையும் குவித்து வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மோகன், "நவீன் பிரதர், எப்படி இருக்கீங்க, உங்களுடைய வாழ்த்துக்காக காத்திருக்கிறேன். உங்களின் தவறை உணர்ந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.

பார்த்து.. ஜாக்கிரதை..

பார்த்து.. ஜாக்கிரதை..

மேலும், கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க, அப்புறம் தாறுமாறா எங்கேயாவது போய், முட்டி மோதி விபத்து ஏற்பட்டுட போகுது, பார்த்து.. ஜாக்கிரதை என மிரட்டும் தொனியில் அவரது குப்பை பட கமெண்ட்டுக்கு சரியான பதிலடியும் கொடுத்துள்ளார். திரெளபதி இயக்குநரின் இந்த ட்வீட் மீண்டும் சமூக வலைதளத்தில் சண்டையை கிளப்பியுள்ளது.

பங்கம் பண்றீங்க

மூடர் கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும், அக்னிச் சிறகுகள் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் இயக்குநர் நவீனை, வான்டட்டாக வம்பிழுக்கும் விதமாக திரெளபதி இயக்குநர் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், "பாரபட்சம் பார்க்காம பங்கம் பண்றீங்க தல" என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மொக்கை படம்

"ஒரு மொக்கை படத்தை எடுத்துட்டு இந்த நபர் பண்ணுற அலப்பறை இருக்கே ஐயோ.. ஐயோ.. ஐயோ" என இயக்குநர் நவீனுக்கு சாதகமாக இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். அதனை பார்த்த திரெளபதி படத்தின் ஆதரவாளர்கள், "நல்லா கதருடா" என்றும், "கதறல் சத்தம்" என்றும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

ஜாதி பெருமை

"எப்படி தலைவா, இப்படியெல்லாம்.. நாங்க எவ்ளோ பெரிய சமூகம் தெரியுமான்னு கூவிக் கூவி ஜாதி பெருமை பேசி ஒரு படம் எடுத்துட்டு, இயக்குநர் நவீன் மிஸ்டேக் பண்ணிட்டாராம்.. மோகன் அண்ணா, ஜாதி பெருமை பேசி சம்பாதிக்குறது எப்படின்னு அருமையா காட்டிருக்கீங்க" என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

என்னது புரட்சியா?

திரெளபதி மகிழ்ச்சியை மட்டும் கொடுக்க வில்லை.. சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்ற போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், "மகிழ்ச்சிய மட்டும் தரல புரட்சியும்.. யார் சொன்னா? நானே சொல்லிக்கிட்டேன் - மினி மாங்கா மோகன் ஜி" என திரெளபதி இயக்குநரை இந்த ரசிகர் வச்சு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X