திரௌபதி பட நடிகையா இது.. அடையாளமே தெரியாமல் மாறிய புகைப்படம்!
சென்னை: நடிகை ஷீலா ராஜ்குமார் திரௌபதி, மண்டேலா, சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நல்ல கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த இவரை சில ஆண்டுகளாக திரையில் பார்க்க முடியவில்லை. இணையத்தில் இப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், நடிகை ஷீலாவா இது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் அருண் விஜய் நடித்த ஆறாது சினம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அந்த படத்தை தொடர்ந்து, டூ லெட் என்ற படத்தில் ஒரு முக்கியமான படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.யோகி பாபு நடித்த மண்டேலா படத்தில் தபால் அதிகாரி வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். அதனை தொடர்ந்து, நல்ல கதாபாத்திரம் உள்ள வேடங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ஷீலா: சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரவதம், பேட்டைக்காளி என்ற வெப்தொடரில் நடித்தார். ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார். இப்படி கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஜாதி திரைப்படம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.
அட என்னமா மாறிவிட்டார்: இவர் நடிப்பு பயிற்சி பள்ளி வைத்துள்ள சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், திருமணத்தை முறித்துக்கொள்வதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. விவாகரத்து அறிவிப்புக்கு பின் சினிமாவில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த ஷீலா, தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஷீலாவா இது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











