twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரௌபதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா.. கேட்டா அசந்து போயிடுவீங்க.. படக்குழு செம ஹேப்பி!

    |

    சென்னை: திரௌபதி படத்தின் முதல் நாள் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

    வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லாத நிலையில் கிரவுட் ஃபன்டிங் முறையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் அண்ணனான ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். இதேபோல் நடிகை ஷீலா திரௌபதியாக லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

    என்ன இது ஆஸ்கார் அவார்டு மாதிரி.. நிர்வாண போட்டோ போட்ட மீரா மிதுன்.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்என்ன இது ஆஸ்கார் அவார்டு மாதிரி.. நிர்வாண போட்டோ போட்ட மீரா மிதுன்.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்

    நேற்று ரிலீஸ்

    நேற்று ரிலீஸ்

    அவர்களை தவிர, நடிகர்கள் கருணாஸ், இளங்கோ, நிஷாந்த், கோபி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் பெரும் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று வெளியானது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 330 தியேட்டர்களில் திரௌபதி படம் ரிலீஸானது.

    தியேட்டருக்கு சென்று..

    தியேட்டருக்கு சென்று..

    படத்தை திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் தியேட்டரில் சென்று பார்த்து ரசித்தனர். குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்த்தனர். ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்த்தார்.

    இருசக்கர வாகனங்கள்

    இருசக்கர வாகனங்கள்

    பல்வேறு மாவட்டங்களில் திரௌபதி படம் ரிலீஸான தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டன. தாரை தப்பட்டைகள், ட்ரம்ஸ், மேள தாளங்கள் முழங்க படம் விமரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களும் மயிலாட்டம் ஒயிலாட்டம் என ஆட்டம்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதேபோல் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    கூட்டம் கூட்டமாக..

    கூட்டம் கூட்டமாக..

    குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி , தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறின. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். குறிப்பாக கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்கில் பெண்களுக்கு என்று பிரத்யேக காட்சி திரையிடப்பட்டுள்ளது.

    அள்ளும் கூட்டம்

    அள்ளும் கூட்டம்

    காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பூஜை செய்தனர். பெரும்பாலான வட மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாய் படத்திற்கு செல்லும் திட்டத்துடன் திரையரங்குகளில் டிக்கெட்டுக்கள் மொத்தமாக முன்பதிவு செய்யப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    திரௌபதி படம் மொத்தமே 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் ரிலீஸான முதல் நாளிலேயே திரௌபதி படம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குநரான மோகனும் உறுதி படுத்தியிருக்கிறார். இதனால் வரும் நாட்களில் கூடுதல் திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    English summary
    Draupathi movie collected above Rs 1 crore in first day itself. Draupathi movie released yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X