பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் திரௌபதி.. 2 நாள்ல இத்தனை கோடிகளா.. பிரமிப்பில் வாயை பிக்கும் கோலிவுட்!

சென்னை: திரௌபதி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கேட்டு கோலிவுட் வாயை பிளந்திருக்கிறது.

Recommended Video

DRAUPATHI MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திரௌபதி. பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் இப்படம் வெளியானது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாடகக்காதல் விவகாரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது திரௌபதி. சில அரசியல் கட்சி தலைவர்களையும் அட்டாக் செய்திருப்பதால் படத்தின் ட்ரெயிலர் வெளியானதுமே எதிர்ப்பும் கிளம்பிவிட்டது.

நிரம்பி வழியும் தியேட்டர்ஸ்

நிரம்பி வழியும் தியேட்டர்ஸ்

பரியேறும் பெருமாள், கன்னிமாடம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்கு எதிர்வினையாக இப்படம் பார்க்கப்படுகிறது. திரௌபதி படத்திற்கு மற்ற சில சமூகங்களை சேர்ந்தவர்களும் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன.

பிரபலங்கள் புகழாரம்

பிரபலங்கள் புகழாரம்

பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுடன் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு பெற்றோரின் ஆதரவும் அதிகம் கிடைத்துள்ளது. படத்தை அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.

தியேட்டர் அதிகரிப்பு

தியேட்டர் அதிகரிப்பு

தமிழகத்தில் முதல் நாளில் 330 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லானது. அதோடு முதல் நாளிலேயே படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டது.

சென்னை வசூல்

குறிப்பாக திரௌபதி படம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான முதல் இரண்டு நாட்களில் திரௌபதி படம் வசூலித்த தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னையில் முதல் இரண்டு நாட்களில் திரௌபதி படம் 32 லட்சம் ரூபாய் வசூலை குவித்திருக்கிறது.

5 கோடி ரூபாய் வரை

அதேநேரத்தில் சென்னை உட்பட மற்ற மாவட்டங்கள் என முதல் நாளில் 2.71 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 2.12 கோ ரூபாயும் என இரண்டு நாட்களில் மொத்தம் 4.83 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தை தயாரிக்க மொத்தம் 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது திரௌபதி திரைப்படம்.

மிரட்டும் திரௌபதி

மிரட்டும் திரௌபதி

விடுமுறை நாளான இன்றும் திரௌபதி அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திரௌபதி படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை காட்டி மிரட்டி வருகிறது. திரௌபதி படத்தின் முதல் 2 நாட்கள் வசூலை பார்த்து வாயை பிளந்திருக்கிறது கோலிவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X