அப்போ திரும்பவும் ஒரு மிரட்டல் இருக்கு.. அதே கூட்டணி மீண்டும் சேர்ந்து படம் பண்ண போறாங்களாம்!

சென்னை: அண்மையில் வெளியாகி தமிழகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற திரௌபதி படத்தின் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Galatta Tamil சேனலில் என்ன ஆச்சு?...வீடியோ வெளியிட்ட திரௌபதி இயக்குனர்

வண்ணாரப் பேட்டை இயக்குநர் மோகன் இயக்கத்தில் வெளியான படம் திரௌபதி. நாடகக்காதல் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.

Draupathi team going to join again

இந்த படத்தில் நடிகர் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஹீலா நடித்திருந்தார். இந்த படத்தை ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனாலும் படம் ரிலீஸான பிறகு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தப்படத்தின் தலைப்பும் இதேபோன்று கடவுள் பெயரை கொண்டதாகதான் இருக்கும் என படத்தின் இயக்குநரான மோகன் தெரிவித்திருந்தார்.

Draupathi team going to join again

இந்நிலையில் திரெளபதி படத்தின் இசையமைப்பாளர் ஜுபின் தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குனர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்டு உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்"என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திரௌபதி படம் வசூலை குவித்து மிரட்டியது. இந்நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: draupathi திரௌபதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X