சாதிய தீண்டாமைக்கு சவுக்கடி .. டிரெய்லரில் மிரட்டிய திரௌபதி.. 28ந் தேதி ரிலீஸ் !

சென்னை: திரௌபதி திரைப்படம் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திரெளபதி படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் இன்றைய அரசியல் நிகழ்வை சொல்லும் படமாகவும் இன்றைய சமூக பிரச்சினைகளை சொல்லும் படமாகவும் அமைந்துள்ளது.

 Draupathi to be released on Feb 28

திரெளபதி இப்படம் ஒரு சாதி படமா அல்ல குழந்தை திருமணம் எதிர்ப்பு அதற்கான படமா என்று கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. படத்தின் டிரெய்லர் ஆரம்பித்து முதல் முடியும் வரை பல வசனங்கள் பலரை வியக்க வைத்தன.

பல இயக்குனர்கள் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு கதையை தேர்வு செய்து அதில் சொல்ல வரும் கருத்து மாறாமல் அப்படியே எடுத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்ததும் பலரும் இயக்குனர் மோகனை பாராட்டினர்.

படத்தில் நடித்து இருக்கும் அனைவரின் நடிப்பும் படம் வெளியானதும் மிகவும் பேசப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது பல இடங்களில் நடந்து வரும் சாதி திருமணம் மற்றும் சாதியத் தீண்டாமை போன்ற செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் இப்படம் ஒரு சவுக்கடியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

படத்தில் நடித்த ஷிலா அவரின் கதாபாத்திரம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் மோகன் சமீபத்தில் கூறி இருந்தார். இது ஓரு அப்பா மகள் பார்க்க வேண்டிய படம் என்றார். தன் மகளை ஒரு நல்ல குடும்பத்தில் மணமுடித்து வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தகப்பனின் கனவு. அந்த கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்பதே இப்படத்தின் கதை என்று கூறினார் இயக்குனர்.

அனைவரிடத்திலும் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது, வருகின்ற 28ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X