திரெளபதி vs ஜிப்ஸி.. எந்த படம் சிறந்தது.. வெடிக்கும் சர்ச்சை.. கொதிக்கும் ட்விட்டர்!

சென்னை: ஜி. மோகன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரெளபதி திரைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Recommended Video

மொத்தம் 50 சென்சார் cut | GYPSY AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படம் மீண்டும் அந்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் கிளறி உள்ளது.

ஜிப்ஸி தான் சிறந்த படம் என்றும், திரெளபதி குப்பை படம் என்றும் ஒரு தரப்பினர் கருத்துக்களை பதிவிட, திரெளபதி படத்திற்கான ஆதரவு தரப்பும் ட்விட்டர் சண்டையில் இறங்கி இருக்கிறது.

திரெளபதி

திரெளபதி

ஜி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் திரெளபதி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த பாஜகவை சேர்ந்த எச். ராஜா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்டோரும் இந்த படத்திற்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர்.

நல்ல வசூல்

நல்ல வசூல்

கடந்த வாரம் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் திரெளபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. விமர்சன ரீதியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியாக திரெளபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை கலெக்ட் செய்துள்ளது.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

நாடக காதலை தோலுரித்துக் காட்டுவதாக திரெளபதி படத்துக்கு ஒரு தரப்பினர் நல்ல ஆதரவை தெரிவித்தனர். ஆனால், மற்றொரு தரப்போ இந்த படம் குப்பை படம், வெறும் ஜாதி வெறியை தூண்டுவதாக மட்டுமே இருக்கிறது என்றும், மேல் ஜாதிக்காரர்களுக்கான படமாக இருக்கிறது என்ற சர்ச்சை வெடித்தது.

ஜீவாவின் ஜிப்ஸி

ஜீவாவின் ஜிப்ஸி

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பல தடைகளை கடந்து ஒரு வழியாக ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள ஜிப்ஸி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அரசியல், கம்யூனிசம், மத பிரச்சனை என பல காரசாரமான வசனங்களும், காட்சிகளும் இந்த படத்தில் நிறைந்து கிடப்பதாகக் கூறி, சென்சார் போர்டு, பாதி படத்துக்கும் மேல் கத்தரி போட்டதாக செய்திகள் வெளியாகின.

ஜிப்ஸி vs திரெளபதி

ஜிப்ஸி vs திரெளபதி

கடந்த வாரம் வெளியான திரெளபதி திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜீவாவின் ஜிப்ஸி படம் வெளியாகி உள்ள நிலையில், இந்த இரு படங்களில் எது நல்ல படம் என்ற புதிய சண்டை சமூக வலைதளத்தில் உருவாகி உள்ளது.

நவீன் ட்வீட்

திரெளபதி படத்தை குப்பை படம் என்று கூறிய மூடர்கூடம் இயக்குநர் நவீன், ஜிப்ஸி படத்தின் ரிலீசை முன்னிட்டு, "வெகுநாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இன்று முதல் ஜிப்ஸி. குண்டு, அசுரன் ஏற்படுத்திய சமூக தாக்கங்களை தொடரச் செய்வான் இந்த ஜிப்ஸி எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் தோழர்களுக்கு என ராஜுமுருகன் மற்றும் ஜீவாவுக்கு நவீன் வாழ்த்து கூறியுள்ளார்.

ஜாதி வெறியன உண்டாக்கும்

மூடர் கூடம் இயக்குநரை சில தினங்களுக்கு, முன்பாக கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க, உங்க தப்பை உணருங்க, வாங்க திரெளபதி படம் வந்து பாருங்க என ஜி. மோகன் ட்வீட் போட்டது சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், தற்போது, நவீன் போட்ட ட்வீட்டுக்கு கீழே அவரது ஆதரவாளர்கள், தோழரே உங்க படைப்பு ஜாதி அற்றவர்களை உருவாக்கும், அவர்கள் படைப்பு ஜாதி வெறியர்களை உண்டாக்கும் என பதிவிட்டு சண்டையை ஸ்டார்ட் பண்ணி வச்சிருக்காங்க..

மத மாற்றம்

உடனடியாக திரெளபதி படத்தின் ஆதரவாளர் ஒருவர், உள்ளே நுழைந்து, ஓஹோ ஜோடியா ஒண்ணு சேருறீங்களாக்கும்.. எச்சத்துண்டுக்காக ஆசைப்பட்டு மதம் மாறுனவர் தான நீங்க, எளிய மக்களோட படம் மாதிரி காமிச்சு, நைசா, இந்து விரோதத்தை தூண்டி விடுவீங்க உங்கள பத்தி தெரியாதாடா என காரி துப்பியுள்ளார்.

அஜித் ரசிகர்கள்

ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரெளபதி திரைப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் திரையரங்குகளில் தங்கள் நேரடி ஆதரவை தெரிவித்து வந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் ஜிப்ஸி படம் ரொம்ப மோசம் என்றும், இயக்குநர் ராஜு முருகன் ரசிகர்களை டார்ச்சர் செய்துள்ளார் என்றும், டுமில் போராளி மோட் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தியேட்டர்ல தூக்கிடுவாங்க

குப்ப படத்துக்கு ஆதரவு தர சில பேரு இந்த படத்துக்கு தரலாம், ஆனா பாருங்க.. இன்னும் 10 நாள்ல இந்த படத்தை எல்லா தியேட்டர்ல இருந்தும் எடுத்துடுவாங்க.. சாதி அரசியல் கொண்டாடும் சில பேர், மனிதம் போற்றும் திரைப்படத்தை எப்போ கொண்டாட போறோம்? மகாமுனி படமும் இப்படி தான் வீழ்ந்தது, இப்போ ஜிப்ஸியும் என்று இந்த ரசிகரும், திரெளபதி படத்தையே தாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X