கோபி - சுதாகருக்கு விருது வழங்கி கௌரவிக்கனும்.. பெட்டிஷனோடு காவல் ஆணையரைச் சந்தித்த திவிகவினர்!

கோவை: நெல்லையில் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை தமிழ் நாடு அரசியலில் சூழலில் பரபரப்பாக கவனிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற விஷயமாக மாறிவிட்டது. பட்டப்பகலில் நடந்தேறிய ஆணவக் கொலையை, சில சாதிய அமைப்புகள் அது ஆணவக் கொலை அல்ல, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்னை என்று கூறி முட்டுக் கொடுக்க வெல்லாம் செய்தார்கள். அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது.

Dravida Viduthalai Kazhagam Demands Parithabangal Team to Honor By MR Radha Award
Photo Credit:

இப்படி இருக்கும்போது, சாதிய ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள், சமகால இளைஞர்களை எவ்வாறு மூளைச் சலவை செய்து அவர்களை பலிகடாவாக மாற்றுகிறார்கள் என்பதையும், அனைவரும் சமம் என்பதை அழுத்தம் திருத்தமாகவும் நகைச்சுவை கலந்து தங்களுக்கே உரிய பாணியில் கோபி, சுதாகர், டிராவிட் செல்வம் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டார்கள். இந்த வீடியோவுக்கு பெரும்பாலும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் எதிர்ப்புகளும் கிளம்பியது. இது தொடர்பாக எழுந்த எதிர்மறை விமர்சனத்தில் பலரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், வீடியோ நீக்கப்படவேண்டும், மொத்த குழுவும் கைது செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் புகார் அளிக்கப்பட்டது.

Dravida Viduthalai Kazhagam Demands Parithabangal Team to Honor By MR Radha Award
Photo Credit:

M.R. Radha: இந்நிலையில் பெரியார் பற்றாளர், கொளத்தூர் மணியின் திராவிட விடுதலைக் கழகத்தினர், கோவை காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்கள். அதில், " பரிதாபங்கள் யூடியூப் சேனலை மிரட்டுபவர்க்ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி சுதாகருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் கோபி, சுதாகர், டிராவிட் செல்வம் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அதாவது பெரியார், அண்ணா விருதுகள் எப்படி வழங்கப்படுகிறதோ, அதேபோல் இவர்களுக்கு எம்.ஆர். ராதா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X