உலக நாயகனின் விக்ரம் படத்தில் இணையும் நடிகர் நரேன்... கனவு நனவானதாக உற்சாகம்

சென்னை : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் விக்ரம்.

கைதி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் கைதி படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நரேன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து முன்னதாக அப்டேட் வெளியிட்டார்.

மிரட்டிய நரேன்

மிரட்டிய நரேன்

முன்னதாக கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி சக்சஸ் படங்களாக்கியுள்ளார். முக்கியமாக கைதி படத்தில் மிரட்டலான திரைக்கதையை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் கார்த்திக்கு பிறகு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் நரேன்.

இணைந்த நரேன்

இணைந்த நரேன்

தற்போது விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் நிலையில் அந்த படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது நரேன் இணைந்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நரேன், இந்த தருணம் தன்னுடைய கனவு நனவான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

உலக நாயகனின் நடிப்பை பார்த்து திரைத்துறைக்கு கனவுகளுடன் வந்தவர்களில் தானும் ஒருவன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கேரியரில் விக்ரம் முக்கியமான படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் டீசரை பார்த்து லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து கூற முற்பட்ட போது தனக்கு அவர் சர்ப்ரைஸ் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகுந்த சந்தோஷம்

மிகுந்த சந்தோஷம்

டீசரையொட்டி தான் வாழ்த்து தெரிவித்தபோது படத்தில் முக்கியமான கேரக்டர் இருப்பதாகவும் அதில் தான் நடிக்க வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியதாகவும் இதையடுத்து தான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X