twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுன் மாற்றிய வாழ்க்கை.. சினிமா படப்பிடிப்புகள் இல்லை.. வறுமையால் பழங்கள் விற்கும் நடிகர்!

    By
    |

    சென்னை: கொரோனா லாக்டவுன் ஏற்படுத்திய பொருளாதார பிரச்னை காரணமாக, நடிகர் ஒருவர் பழங்கள் விற்று வருவது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்தவர் சோலங்கி திவாகர். இந்தி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் ஆயுஷ்மன் குர்ரானா நடித்த ட்ரீம் கேர்ள், சுஷாந்த் சிங் ராஜ்புத், புமி பட்னேகர் நடித்த சஞ்சிரியா, ஹவா, தித்லி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    கொளுத்தும் வெயில்.. நடு ரோட்டில்.. பார்க்கவே பரிதாபமாக ராதிகா ஆப்தே!கொளுத்தும் வெயில்.. நடு ரோட்டில்.. பார்க்கவே பரிதாபமாக ராதிகா ஆப்தே!

    படப்பிடிப்புகள்

    படப்பிடிப்புகள்

    கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் கடந்த 2 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா, இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா

    கொரோனா

    இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருந்தும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாழ்வாதாரம்

    வாழ்வாதாரம்

    கொரோனா லாக்டவுன் காரணமாக, தினக் கூலி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் பணியாற்றும் தொழிலாளர்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    பழைய தொழில்

    பழைய தொழில்

    இதற்கிடையே நடிகர், சோலங்கி திவாகர், படப்பிடிப்புகள் இல்லாததால் டெல்லியில் பழம் விற்று வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆரம்பத்தில் பழங்கள்தான் விற்றுவந்தேன். இப்போது மீண்டும் பழைய தொழிலுக்கு வந்துவிட்டேன். படப்பிடிப்புகள் இல்லை என்பதால், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதனால் பழங்கள் விற்கத் தொடங்கி விட்டேன்' என்கிறார்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    'மறைந்த ரிஷிகபூருடன், ஷர்மாஜி நம்கீன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு முறையும் எனக்கு அழைப்பு வந்தது. ஆவலுடன் இருந்தேன். இரண்டு முறையும் ஷூட்டிங் கேன்சலாகி விட்டது. பின்னர் ஒரு நாள் அழைப்பு வந்தபோது லாக்டவுன் அறிவித்து விட்டார்கள். எனக்கு ரிஷிகபூருடன் பேச சில வசனங்களும் இருந்தன. ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்கிறார் சோகத்துடன்.

    துரதிர்ஷ்டம்

    துரதிர்ஷ்டம்

    'சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதால் அதிக சம்பளம் கிடைக்காது. அது என் குடும்பத் தேவைக்கும் போதாது. எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காதது என் துரதிர்ஷ்டம். வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருமானம் வந்தால் நிச்சயம் பழங்கள் விற்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படாது என்கிறார் அவர்.

    English summary
    Dream Girl actor Solanki Diwakar now sells fruits to earn a living
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X