ஆணாக மட்டுமல்ல பெண்ணாகவும் கலக்கும் ட்ரீம் கேர்ள் ஆயுஷ்மான் குரானா - வசூல் சாதனை
சென்னை: ட்ரீம் கேர்ள் திரைப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்ததோடு, பெண் குரலில் நளினமாக பேசி நடித்து ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்துள்ளார். இத்திரைப்படம் வசூலில் 100 கோடியையும் தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்ததற்காக ஆயுஷ்மான் குரானா மற்றும் நஷ்ரத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் செப்டம்பர் 13ஆம் தேதியன்று வெளியான இந்தி காமெடி திரைப்படம் ட்ரீம் கேர்ள். தேசிய விருது வென்ற ஆயுஷ்மான் குரானா இத்திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்ததோடு, பெண் குரலில் நளினமாக பேசி நடித்து ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்துள்ளார்.

ஒரு நாடக கலைஞனான ஆயுஷ்மான் குரானா தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நகைச்சுவையோடும், காதலோடும் சேர்த்து ஒரு கலவையாக படித்துள்ள படம் ட்ரீம் கேர்ள். ராஜ் சாண்டில்யா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நுஷ்ரத் பரூச்சா, அன்னு கபூர், மன்ஜோத் சிங், விஜய் ராஸ் மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆயுஷ்மான் குரானா கரம்வீர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் பெண் வேடமிட்டு அசத்தி வரும் கதாபாத்திரம். நாடகங்களில் சீதா வேடமிட்டு நடித்தாலே, ஊர்மக்களால் சீதையாகவே கொண்டாடப்படுகிறார் கரம்.
ஆனால், ஒரு கட்டத்தில் பெண் வேடமிட்டு நடிப்பது பிடிக்காமல், வேறு வேலை தேடி அலையும் கரம்வீருக்கு, கால் சென்டர் ஒன்றில் தொலைபேசியில் பெண் குரலில் 24 மணி நேரமும் ஆபாசமாக பேசும் செக்ஸ் சாட் வேலை தான் கடைசியில் கிடைக்கிறது.
அதனாலேயே கரம்வீருக்கு பல பாதிப்புகளும், அவமானங்களும் ஏற்படுகின்றன. கடைசியில் இந்த பிரச்சனைகளில் கரம்வீர் மீள்கிறாரா இல்லையா என்பதை நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ் சாண்டில்யா. ரசிகர்களை நகைச்சுவையில் உறைய வைக்கிறார் இயக்குனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வசூலில் 100 கோடியையும் தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்ததற்காக ஆயுஷ்மான் குரானா மற்றும் நஷ்ரத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து வெற்றியடையச் செய்த ஒவ்வொரு ரசிகனுக்கும் கோடான கோடி நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











