Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் இணைந்த நயன்தாரா… சென்னையில் நாளை படப்பிடிப்பு!
சென்னை : நடிகை நயன்தாரா ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் இயக்க உள்ளார்.
ஒல்லியாக ஆன பிக் பாஸ் லாஸ்லியா.. வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளனர்.
ரஜினியுடன்
நயன்தாரா ரஜினியுடன் அண்ணாத்தா, காத்துவாக்குல ரெண்டு காதல் , நெற்றிக்கண் மற்றும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா அறம் திரைப்படத்தைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை நடிக்க விரும்புகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்தும்
மாயா, டோரா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில வெற்றி பெற்றன. இதனால், கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நயன்தாரா தேர்வு செய்து நடித்து வருகிறார்.
3வது படம்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த மாயா திரைப்படம் வெற்றி பெற்றது. அதேபோல கார்த்தியுடன் நயன்தாரா நடித்த காஷ்மோரா திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 3வது முறையாக நயன்தாராவுடன் இணைந்துள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் பூஜையுடன் தொடங்க உள்ளது.
வெளியீட்டுக்கு தயார்
நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியிட ஒப்பந்தமாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.