இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
Recommended Video
சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அவர்கள் ஹிந்தியிலும் படம் தயாரிக்கும் வாய்ப்புகள் உண்டு .தமிழில் வினியோகிஸ்தராக செயல் பட்டு வெற்றி கண்ட இந்த நிறுவனம் தயாரிப்பில் கால்பதித்து பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்தது .இதன் மூலம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னனி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது .
ட்ரீம் வாரியர் நிறுவனம் தன் தயாரிப்பை துவங்கிய படம் சகுனி ,கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் சரியான வசூலை அள்ளியது அந்த படம் .அதன் பின் தமிழில் இதுவரை வெளிவந்த சிறந்த அரசியல் படங்களில் இதுவும் ஒன்று என கூறப்பட்ட ஜோக்கர் படம் .பின் கார்த்தியின் காஸ்மோரா மற்றும் கூட்டத்தில் ஒருவன் படத்தை தயாரித்து இருந்தனர் .

இந்நிறுவனத்தின் கடைசி பெரிய ஹிட் படம் என்றால் அது கைதி தான் .இந்த படத்தை தான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனுத்துடன் இனைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்தாக தமிழில் வட்டம் படத்தை தயாரித்து வருகிறது ,இந்த படத்தில் சிபிராஜ் ,ஆன்ட்ரியா மற்றும் அதுல்யா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்


Click it and Unblock the Notifications