twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

    |

    Recommended Video

    Losliya Treat to fans | Friendship | Losliya On Board | Kaithi remade

    சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    dreeam warrior pictures entering bollywood

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அவர்கள் ஹிந்தியிலும் படம் தயாரிக்கும் வாய்ப்புகள் உண்டு .தமிழில் வினியோகிஸ்தராக செயல் பட்டு வெற்றி கண்ட இந்த நிறுவனம் தயாரிப்பில் கால்பதித்து பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்தது .இதன் மூலம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னனி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது .

    ட்ரீம் வாரியர் நிறுவனம் தன் தயாரிப்பை துவங்கிய படம் சகுனி ,கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் சரியான வசூலை அள்ளியது அந்த படம் .அதன் பின் தமிழில் இதுவரை வெளிவந்த சிறந்த அரசியல் படங்களில் இதுவும் ஒன்று என கூறப்பட்ட ஜோக்கர் படம் .பின் கார்த்தியின் காஸ்மோரா மற்றும் கூட்டத்தில் ஒருவன் படத்தை தயாரித்து இருந்தனர் .

    dreeam warrior pictures entering bollywood

    அதன்பின் 2017ல் தான் இந்நிறுவனம் பெரிய அந்தஸ்தை பெற்றது அதற்கு காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த தீரன் அதிகாரம் ஒன்றாகும் .இந்த படம் மிக பெரிய வசூலையும் பெயரையும் சம்பாதித்து தந்தது.இதற்கு பிறகு இவர்களின் அருவி படம் ட்ரீம் வாரியர் நிறுவனம் கார்த்தி படங்களை மட்டும் சிறப்பாக தயாரிக்கும் படம் இல்லை எனும் வதந்தியை உடைத்த படமாகும் .

    இந்நிறுவனத்தின் கடைசி பெரிய ஹிட் படம் என்றால் அது கைதி தான் .இந்த படத்தை தான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனுத்துடன் இனைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்தாக தமிழில் வட்டம் படத்தை தயாரித்து வருகிறது ,இந்த படத்தில் சிபிராஜ் ,ஆன்ட்ரியா மற்றும் அதுல்யா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

    Read more about: kaithi sr prabhu கைதி
    English summary
    SR prabhu and sr prakash babu has joined hands togather and making films in the banner dream warrior pictures. now the movie kaithi which was a great hit in tamil is now getting into hindhi . this is going to be a great hit believes the producers. so lots of preproduction work going on.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X