என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!

சென்னை : இயக்குனர் ரத்னகுமார், விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தருணத்தை புகைப்படங்களுடன் தற்போது பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படங்கள் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இப்படத்தில் கூடுதல் வசனகர்த்தாவாக ரத்னகுமார் பணியாற்றி உள்ளார்.

ரத்னகுமார்

ரத்னகுமார்

மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

மாஸ்டர்

மாஸ்டர்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில், அதாவது பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஒடிடியில் ரிலீஸ்

ஒடிடியில் ரிலீஸ்

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த போதும், திரையரங்கில் கூட்டம் குறையாமல் இருந்தது. திரையரங்கில் வெளியான பெரிய படமான மாஸ்டர், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாஸ்டர் திரைப்படம் வெளியான 16 நாள் கழித்து இத்திரைப்படம் ஒடிடியில் வெளியானது.

பிறந்த நாளாக மாறியது

பிறந்த நாளாக மாறியது

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்த ரத்னகுமார், தனது பிறந்த நாளை மாஸ்டர் படக்குழுவினருடன் கொண்டாடிய த்ரோ பேக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், கேக் வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து, வெட்டும் முன் கும்பிட்ட தருணம். என் வாழ்க்கையில் முதல் முறையாக எனது பிறந்த நாள் மறக்க முடியாததாக மாற்றியது. விஜய் சார், நண்பன் லோகேஷ், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X