‘உஷாரைய்யா.. உஷாரு’.. பிக் பாஸுக்கு அலர்ட் கொடுக்கும் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சீசன் போல் இல்லை என்ற குறையை போக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் பரபரப்பான டாஸ்க்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சக போட்டியாளர்களுக்கு இடையே இருக்கும் புரிதலை உறுதி செய்யும் வகையிலான டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அச்சங்கத் தலைவர் கூறியிருப்பதாவது:
"""BIG BOSS""உஷாரையா!....உஷார்!
ஐயா..பிக்பாஸ் அவர்களே!
தற்போது நடைபெற்றுவரும்பிக்பாஸு நிகழ்ச்சியினை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கதலைவர் தொடர்ந்து பார்த்துவருகிறேன்.
தற்போதுநடைபெறும்நிகழ்ச்சியில்... பாலாஜிக்கு மொட்டையடிசாச்சு, ஜனனிக்கு புருவத்தை எடுத்தாச்சு, ஐஸ்வரியாவுக்கு முடிய வெட்டியாச்சு, ரித்திகாவுக்கு கரும்புள்ளி கையில குத்தியாச்சு, சென்ராயன் முடிய செம்பட்டையாக்கியாச்சு.
ஆக.. ஆக, நிகழ்ச்சியிலே... மொட்டையடிச்சு, முடியெடுத்து, கரும்புள்ளி குத்தி முடிசாச்சு....மிச்சமிருப்பது..."".BiGBOSS"" நீங்க மட்டும்தான்...
உங்கள கடேசியாக கழுதைமேல ஏற்றி கடைசியாக நிகழ்ச்சிய முடிப்பார்களோ என்ற அச்சம் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. தயவுகூர்ந்து உஷாராக நிகழ்ச்சியை நிறைவு செய்திட வேண்டுகிறது சங்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











