இன்னைக்கு தான் படமே ரிலீஸ்..அதற்குள் தமிழ்ராக்கர்ஸில் வெளியான படம்.. அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை : பாலிவுட் நட்சத்திரத்தின் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியான சில மணி நேரத்திலேயே, தமிழ்ராக்கர்ஸில் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திரையுலகில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது படம் வெளியான அன்றே இணையதளங்களில் வெளியாவதுதான்.
படம் திருட்டுத்தனமாக வெளியாமல் இருக்க பல முயற்சிகள் செய்த போதும் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திரைத்துறை தவித்து வருகிறது.

திரிஷ்யம்
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவான இந்தப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

திரிஷ்யம் 2
அதேபோல கடந்த வருடம் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் மீண்டும் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளி மொழிகளில் படம் ரீமேக்கானது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படம் வெளியானது.

படக்குழுவினர் அதிர்ச்சி
இந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் திரிஷ்யம் 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை நிஷிகாந்த் காமத் இயக்க, இந்த இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் என்பவர் இயக்கியுள்ளார். த்ரிஷ்யம் 2 இந்தி திரைப்படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ்ராக்கர்ஸில் சட்டவிரோதமாக படம் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழுவினர் மட்டுமின்றி திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்ராக்கர்ஸ் மட்டுமின்றி டெலிகிராம் போன்ற தளத்திலும் படம் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. படம் இணையத்தில் வெளியான போதிலும், அடுத்த மூன்று நாள்களுக்கு மட்டுமின்றி, அடுத்தடுத்த வார நாட்களிலும் படம் புக்காகி உள்ளது.

பெரிய நடிகர்களின் படம்
இதற்கு முன்பாக விஜய்யின் சர்கார் படம் வெளியான முதல் நாளே ஹெச்.டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டரில் அறிவித்திருந்தது. அதைப் போலவே படம் வெளியான முதல் நாளன்றே முழு படத்தையும் இணையத்தில் வெளியிட்டது. ரஜினிகாந்தின் 2.0 திரைப்படமும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











