திரிஷ்யம் 2 இந்தி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அஜய் தேவ்கனும் தபுவும் இணைந்து நடிப்பார்களா?

மும்பை: திரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டூடியோஸ் கைப்பற்றி உள்ளது.

Recommended Video

Drishyam 2 படத்தில் நடித்த Lawyer Renukha யார் தெரியுமா?

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

தெலுங்கில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியிலும் விரைவில் ரீமேக் ஆக உள்ளது.

சீட் எட்ஜ் திரில்லர்

சீட் எட்ஜ் திரில்லர்

மோகன் லால் மீண்டும் ஜார்ஜ் குட்டியாக மாறி தனது குடும்பத்தை காப்பாற்றும் திரிஷ்யம் 2 திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருந்தது. தியேட்டர்களில் வெளியாகாமல் அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

திரிஷ்யம் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. திரிஷ்யம் 2 படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ள நிலையில், உடனடியாக தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் மலையாள திரிஷ்யம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்பை வைத்தே தொடங்கினார். தெலுங்கு முதல் பாகத்தில் நடித்த மீனா மற்றும் நதியா மீண்டும் இணைந்துள்ளனர்.

பாலிவுட்டில் ரீமேக்

பாலிவுட்டில் ரீமேக்

தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் திரிஷ்யம் படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப் போகின்றனர். இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது. பனோரமா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர்களான குமார் மாங்கத் பதாக் மற்றும் அபிஷேக் பதாக் ஆகிய இருவரும் இந்த சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளனர்.

மீண்டும் இணைவார்களா

மீண்டும் இணைவார்களா

கடந்த 2015ம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் முதல் பாகம் 68 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அஜய் தேவ்கன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபுவும் நடித்திருந்தனர். மீண்டும் இந்தியில் திரிஷ்யம் 2 உருவாகவுள்ள நிலையில், அஜய் தேவ்கன், தபு மற்றும் ஸ்ரேயாவே இணைந்து நடிப்பார்களா? அல்லது நடிகர்கள் மாற்றப்படுவார்களா? என்பதை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

இயக்குநர் இல்லை

இயக்குநர் இல்லை

50 வயதான இயக்குநர் நிஷிகாந்த் கமாத் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். திரிஷ்யம் இந்தி படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப்பை வைத்தே இயக்குவார்களா? இல்லை வேறு ஒரு இந்தி இயக்குநரை வைத்து இயக்குவார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X