த்ரிஷ்யம் 2 தியேட்டரிலும் ரிலீஸ்...எங்கு தெரியுமா ?

திருவனந்தபுரம் : ஜீத்து மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. மெகாஹிட் படமாக அமைந்த இந்த படம் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Recommended Video

Drishyam 2 படத்தில் நடித்த Lawyer Renukha யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து மோகன் திட்டமிட்டார். மிக விறுவிறுப்பாக எடுக்க திட்டமிடப்பட்ட த்ரிஷ்யம் 2, கொரோனா முதல் அலையால், மிக குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட உடன், படப்பிடிப்பு துவங்கப்பட்டு 40 நாட்களில் முடிக்கப்பட்டது.

ஓடிடி ரிலீசில் அதிக வரவேற்பு

ஓடிடி ரிலீசில் அதிக வரவேற்பு

இருந்தும் மற்ற வேலைகளை முடிப்பதற்குள் கொரோனா இரண்டாம் அலை துவங்கியதால், த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டும் மிகப் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. மலையாள திரைப்பட வரலாற்றிலேயே ஓடிடி.,யில் அதிகம் பார்க்கப்பட்ட 3 வது படமாக த்ரிஷ்யம் 2 உள்ளது.

தலைகீழான த்ரிஷ்யம் 2 ரிலீஸ்

தலைகீழான த்ரிஷ்யம் 2 ரிலீஸ்

முன்பெல்லாம் பெரிய ஸ்டார்களின் படங்கள் என்றால் முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, பின் ஓடிடி.,யிலும், அதைத் தொடர்ந்து டிவி.,யிலும் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால் கொரோனா காரணமாக ஓடிடி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட த்ரிஷ்யம் 2, பிறகு டிவி.,யில் ஒளிபரப்பப்பட்டது.

சிங்கப்பூரில் ரிலீஸ்

சிங்கப்பூரில் ரிலீஸ்

உலகம் முழுவதும் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். லேட்டஸ்ட் தகவலின் படி ஜுன் 26 ம் தேதி சிங்கப்பூரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் த்ரிஷ்யம் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ஐக்கிய அரபு அமீரக திரைப்பட விநியோகஸ்தர்கள் குழுமம் தான் இந்த படத்தை சிங்கப்பூரில் ரிலீஸ் செய்ய உள்ளது.

மக்களின் விருப்பத்திற்காக ரிலீஸ்

மக்களின் விருப்பத்திற்காக ரிலீஸ்

இது பற்றி அவர்கள் கூறுகையில், பொது மக்களின் விருப்பத்தின் பேரிலும், பலரும் தியேட்டரில் பார்க்க விருப்பம் தெரிவித்ததாலும் இதனை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளோம். எங்கள் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

மல்டிபிளக்ஸ் ரிலீஸ்

மல்டிபிளக்ஸ் ரிலீஸ்

இதற்கு முன் அமிதாப் பச்சன் நடித்த சோலே, சார்லி சாப்ளின் படங்கள் உள்ளிட்ட பல படங்கள் ஐக்கிய அரபு அமீரக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன என்றனர். சிங்கப்பூரின் மிகப் பெரிய தியேட்டரான கோல்டன் வில்லேஜ் சினிபிளிக்ஸில் த்ரிஷ்யம் 2 திரையிடப்பட உள்ளது.

த்ரிஷ்யம் படத்தின் கதை

த்ரிஷ்யம் படத்தின் கதை

நடுத்தர குடும்ப தலைவனான ஜார்ஜ் குட்டி, தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றவனை கொலை செய்து, அந்த கொலையில் இருந்து தனது அழகிய குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது தான் த்ரிஷ்யம் படத்தின் கதை. இதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ள த்ரிஷ்யம் 2 ல், 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் ஜார்ஜ் குட்டியின் குடும்பம் எவ்வாறு சிக்கியது என்பது தான் கதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X