தீவிரமாகும் கொரோனா தொற்று.. இந்த மாதம் தொடங்குவதாக இருந்த 'த்ரிஷ்யம் 2' ஷூட்டிங் மேலும் தாமதம்!

By

கொச்சி: கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் மேலும் தாமதமாகி உள்ளது.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.

மீனா, ஆஷா சரத், சித்திக், அன்ஷிபா ஹாசன் உட்பட பலர் நடித்தனர். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் படம், சூப்பர் ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்தது.

தமிழில் கமல்ஹாசன்

தமிழில் கமல்ஹாசன்

இந்தப் படம், தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆனது. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

சீனாவிலும் ரீமேக்காகி சாதனைப் படைத்தது. அங்கு, ஷீப் வித்தவுட் அ ஷெப்பர்ட் என்ற பெயரில் உருவாகி, இந்தப் படம் ஹிட்டானது. தனது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போலீஸ் அதிகாரியின் மகனை மகளும், மனைவியும் அடித்துக் கொல்கிறார்கள். அவன் உடலையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் ஹீரோ மறைத்து, இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படத்தின் கதை பரபரப்பாகப் பேசப்பட்டது.

லாக்டவுனுக்கு முன்பாக

லாக்டவுனுக்கு முன்பாக

இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தை உருவாக்குவதைப் பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் 2 ஆம் பாகம் உருவாகிறது என்று அறிவித்தார். இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன் லால், த்ரிஷா நடிக்கும் ராம் என்ற படத்தை லாக்டவுனுக்கு முன்பாக ஆரம்பித்தார். அதன் கதை உஸ்பெஸ்கிஸ்தான், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்பு

கொரோனா காரணமாக இப்போது அங்கு சென்று ஷூட்டிங் நடத்த வாய்ப்பில்லை என்பதால் அந்தப் படத்துக்கு முன்பாக, த்ரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் குறைந்த நபர்களை பயன்படுத்தி சினிமா படப்பிடிப்புகளை தொடங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில மாநிலங்களில் படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளனர்.

தள்ளி வைத்துள்ளோம்

தள்ளி வைத்துள்ளோம்

நடிகர் சுதீப், தனது பாண்டம் படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறார். இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்கும் பெல்பாட்டம் படத்தின் குழு ஷூட்டிங்கிற்காக, இங்கிலாந்து சென்றுள்ளது. த்ரிஷியம் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. 'கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை மேலும் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X