தமிழில் ரீமேக்காகும் த்ரிஷ்யம் 2.. பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன்?

சென்னை : கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அப்படியே இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்க த்ரிஷ்யம் 2 ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாக இருக்கும் த்ரிஷ்யம் 2ன் தமிழ் ரீமேக் பற்றிய பேச்சு வார்த்தையில் கமல்ஹாசனுடன் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் பாபநாசம்

தமிழில் பாபநாசம்

குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை தயாரித்து வசூலை பலமடங்கு அள்ளுவதை தாரக மந்திரமாக கொண்டிருக்கும் மலையாள திரைப்படத்துறையில் வெளியாகும் பல திரைப்படங்கள் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து வரும் நிலையில் எதார்த்தமான திரைப்படங்களுக்கு ரீமேக் செய்யும் டிமாண்ட்டும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

உணர்வுப்பூர்வமான நடிப்பை

உணர்வுப்பூர்வமான நடிப்பை

மலையாளத்தில் மோகன்லால் நடித்திருக்க தமிழில் பாபநாசத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி செமையாக ஸ்கோர் செய்திருந்தார். மேலும் இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வசூலை குவித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நேரடியாக அமேசான் தளத்தில்

நேரடியாக அமேசான் தளத்தில்

முதல் பாகத்திற்கு கிடைத்த அமேசிங்கான வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இப்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்-நடிகைகள் இந்த படத்திலும் நடித்துள்ளனர் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகிறது.

சுயம்புலிங்கத்தை மீண்டும்

சுயம்புலிங்கத்தை மீண்டும்

இந்த நிலையில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசனை மீண்டும் நடிக்க வைக்க தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரியாது. தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ வெளியாகும் என நம்பப்படுகிறது . ரசிகர்களும் சுயம்புலிங்கத்தை மீண்டும் காண ஆவலுடன் இருக்கின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X