ஆரம்பமானது திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

ஹைதராபாத்: இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாக உள்ள தெலுங்கு திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 5ம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகி விட்டது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

வெறித்தனமான வெற்றி

வெறித்தனமான வெற்றி

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்தது. அமேசான் பிரைமில் வெளியாகாமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால், திரிஷ்யம் 2 மிகப்பெரிய வசூல் வேட்டை செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

திரிஷ்யம் 2 வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக இயக்குநர் ஜீத்து ஜோசப்பை அழைத்து தெலுங்கில் திரிஷ்யம் 2 ரீமேக்கை செய்ய கோரினார் நடிகர் வெங்கடேஷ். மீண்டும் தெலுங்கு திரிஷ்யம் பட டீம் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஒன்று கூடி உள்ளது.

மீனா தான் ஜோடி

மீனா தான் ஜோடி

மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்த மீனா தான் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷுக்கும் ஜோடி. அதே போல இளைய மகள் கதாபாத்திரத்திலும் எஸ்தர் அனிலே நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.

யாரெல்லாம் நடிக்கிறாங்க

யாரெல்லாம் நடிக்கிறாங்க

தெலுங்கு திரிஷ்யம் 2வில் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக மீனாவும் இளைய மகளாக எஸ்தர் அனிலும் இணைந்துள்ள நிலையில், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை நதியாவும், நடிகர் சம்பத்தும் இணைந்துள்ளனர். மொத்த படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

பாபநாசம் 2வுக்கு வெயிட்டிங்

பாபநாசம் 2வுக்கு வெயிட்டிங்

எப்போதெல்லாம் திரிஷ்யம் 2 ரீமேக் குறித்த அறிவிப்புகள் வெளியாகிறதோ? அப்பொதெல்லாம் தமிழில் பாபநாசம் 2 எப்போது வரும்? கமல்ஹாசனை மீண்டும் சுயம்பு லிங்கம் ஆக பார்க்க வேண்டும் என்றே தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு கமெண்ட் பக்கத்தில் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X