த்ரிஷ்யம்2 தெலுங்கு ரீமேக்… மீண்டும் இணைந்த மீனா, நதியா… வைரல் போட்டோஸ் !
சென்னை : த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் மீனா மற்றும் நதியா ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
Recommended Video
தெலுங்கு ரீமேக்கைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி ரீ மேக் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.
த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன .

ஒடிடியில் ரிலீஸ்
மலையாளத்தில் மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழ், தெலுங்கு , இந்திய உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் ரீ மேக் செய்யப்பட்டது. மீண்டும் மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவானி த்ரிஷ்யம் 2 பிப்ரவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

வெங்கடேஷ் மீனா
த்ரிஷ்யம்2 கிடைத்த வரவேற்பை அடுத்து, முதலாவதாக தெலுங்கு ரீ மேக் தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா மீண்டும் இரண்டாம் பாகத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். அதே போல நதியாவும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆச்சரியம்
கொரோனா பரவல் சூழ்நிலையிலும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை வெங்கடேஷ் முடிக்கிறாராம். 45 நாட்களுக்குள்ளாக அவரது படப்பிடிப்பு முடிவடைவது ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு படக்குழு தங்களது பணியை வேகமாகச் செய்துள்ளதாக டோலிவுட்டில் பாராட்டுகிறார்கள்.

செல்ஃபி ப
இந்நிலையில் மீனா மற்றும் நதியா ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது. அதில், இருவரும் காமெடியாக போஸ் கொடுத்துள்ளனர். மீனா நதியாவின் கழுத்தை நெறிப்பது போலும், நதியா நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டியுள்ளார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

நண்பர்கள்
மீனா மற்றும் நதியா கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னரே ஒரே காலகட்டத்தில் கதாநாயகிகளாக நடித்து வ்ந்தார்கள் என்பது பிரபு நடித்த ராஜகுமாரன்மற்றும் மேலும் சில படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











