வெங்கடேஷின் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்... நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை : த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள், இயக்குனர் OTT நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் நடத்த வெங்கடேஷ் , மீனாவும் இரண்டாம்பாகத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

ஒடிடியில் வெளியானது.

ஒடிடியில் வெளியானது.

த்ரிஷ்யத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்துமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷ்யம்2 சில மாதங்களுக்கு முன் நேரடியாக ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் தெலுங்கு, தமிழில் ரீமேக் ஆக உள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிலும் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் , மீனா நடித்துள்ளனர். இந்த த்ரில்லர் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு வெளியிட்டள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் டி சுரேஷ் பாபு, ஆண்டனி பெரம்பவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் OTT நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து இப்படத்தை ஒடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் செயற்கைக்கோள் உரிமையை ஸ்டார் மா தொலைக்காட்சி பெற்றுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

அதேபோல் இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் 2 படப்பிடிப்பு எப்போது துவங்கும், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. அந்த வகையில் விக்ரம் படத்திற்கு முன்னரே, பாபநாசம் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட கமல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நதியா

நதியா

மேலும் பாபநாசம் 2 படத்தில் நடிகை கௌதமிக்கு பதிலாக, நடிகை நதியாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும், இதனை ஆண்டு காலம் இணைந்து நடிக்காமல் இருந்து கமல், நதியா முதல் முறையாக இப்படத்தில் இணையவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X