ஜார்ஜ் குட்டியின் குடும்பம் அன்றும் இன்றும்.. மீனா வெளியிட்ட சுவாரசியமான புகைப்படங்கள்!

சென்னை : எதார்த்தமான கதை களத்தை கொண்டு உருவாகும் மலையாளத் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் பல ரசிகர்கள் இன்றளவும் இருந்து வருகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் வெளியாகும் மலையாள திரைப்படத்துறையில் 2013ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் மாபெரும் வெற்றி பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை புரிந்தது.

த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ், ஹிந்தி தெலுங்கு உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது அதன் இரண்டாம் பாகம் தடபுடலாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அதில் நடித்து வரும் நடிகை மீனா இப்போது சுவாரசியமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சவாலான கதாபாத்திரங்களை

சவாலான கதாபாத்திரங்களை

90களில் தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கிய மீனா இப்போதும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்ககளை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

அண்ணாத்த திரைப்படத்தில்

அண்ணாத்த திரைப்படத்தில்

படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தி வரும் இவர் இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இருக்கையின் நுனியில்

இருக்கையின் நுனியில்

இதற்கிடையில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர் 2013 ஆம் ஆண்டு மோகன்லாலுடன் இணைந்து த்ரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து அசத்திய நிலையில் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது.

பல மொழிகளில் ரீமேக்

பல மொழிகளில் ரீமேக்

மிகக் குறைந்த பட்ஜெட், விறுவிறுப்பான திரைக்கதை, அனைவரையும் ரசிக்க வைக்கும் குடும்பப்படம் என அனைவரும் கொண்டாடும் வகையில் உருவான த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.

தடபுடலாக

தடபுடலாக

இவ்வாறு த்ரிஷ்யம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்த இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது உருவாகும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், சமீபகாலமாக வெளியான தகவலை அடுத்து இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது

இப்போது இருக்கும் புகைப்படம்

இப்போது இருக்கும் புகைப்படம்

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, அன்சிபா, எஸ்தர் அணில் என அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க முதல் பாகத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் இப்போது இருக்கும் அனைவரின் புகைப்படத்தையும் 2013 மற்றும் 2020 என ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கும் இந்த பதிவிற்கு பலரும் மீனாவை என்றும் இளமையுடன் இருக்கின்றீர்கள் என வர்ணித்து வரும் அதேசமயம் த்ரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எவ்வாறு இருக்கும் என பலரிடமும் ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X