Drishyam 3 Day 1 Box Office - த்ரிஷ்யம் 3 முதல் நாள் வசூல் எவ்வளவு?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை இதுதான்

சென்னை: மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வந்திருக்கும் த்ரிஷ்யம் 3 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த சீரிஸில் வெளியாகியிருக்கும் மூன்றாவது பாகமும் ஹிட்டடித்திருப்பதால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் அந்தப் படம் முதல் நாளான நேற்று பாக்ஸ் ஆஃபிஸில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் இணையத்தில் வந்திருக்கின்றன.

த்ரிஷ்யம் திரைப்படத்தின் முதல் பாகம் 2013ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மலையாளத்துக்குள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. கமல்ஹாசன் தமிழில் அதை பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கும் செய்துவிட்டார். இங்கேயும் தமிழ் வெர்ஷன் பட்டையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாவது பாகத்தையும் அதே கூட்டணியில் உருவாக்கினார் ஜீத்து ஜோசப். அதுவும் சூப்பர் ஹிட்டடித்தது.

Drishyam 3 Box Office Collection Day 1 Mohanlal Starrer Opens Big Worldwide With Rs 43 Crore
Photo Credit:

த்ரிஷ்யம் 3: இப்படிப்பட்ட சூழலில் த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை உருவாக்கினார். இதிலும் மோகன் லால், மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்கள் எப்படி பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தனவோ அதேபோன்ற ஒரு மேஜிக்கை இந்தப் படத்தின் மூலமும் நிகழ்த்த வேண்டும் என அந்த டீம் முனைப்போடு வேலை பார்த்திருந்தது. படமானது நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. தங்களிடம் இருக்கும் அதீத எதிர்பார்ப்போடு நேற்று படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள்.

Also Read
Drishyam 3 Review: திரிஷ்யம் 3 விமர்சனம்.. மோகன்லாலின் மூன்றாவது இன்னிங்ஸ் செஞ்சுரியா? டக் அவுட்டா?
Drishyam 3 Review: திரிஷ்யம் 3 விமர்சனம்.. மோகன்லாலின் மூன்றாவது இன்னிங்ஸ் செஞ்சுரியா? டக் அவுட்டா?

எப்படி இருக்கு படம்?: அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஜீத்து அண்ட் டீம் நன்றாகவே தீனி போட்டிருந்தது. இந்த பாகத்தில் மூத்த மகளுக்கு திருமணம் நடக்கும் விஷயத்தை மைய சரடாக வைத்து; முந்தைய விஷயங்களையும் இணைத்து அட்டகாசமாகவே ஸ்க்ரீன் பிளே செய்திருந்தார் ஜீத்து ஜோசப். திரைக்கதையின் வேகத்தை பொறுத்தவரை இரண்டு பாதியிலுமே பேசஞ்சர் வண்டியை போல் நிதானமாகவே சென்றது. அதேசமயம் க்ளைமேக்ஸை நெருங்க நெருங்க சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரெஸ்ஸாக மாறியது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சந்தோஷத்தில் படக்குழு: உண்மையில் சொல்லப்போனால் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இரண்டாவது பாகம் கொஞ்சம் டல்தான்.இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது இரண்டாவது பாகத்தை விட சூப்பர் என்று பெயர் எடுத்திருக்கிறது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறது. நேற்றிலிருந்து படத்துக்கு நல்ல டாக்குகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அதன் காரணமாக இனி வரும் நாட்களிலும் படத்துக்கு கண்டிப்பாக கூட்டம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் நிலவரம் என்ன?: இந்நிலையில் த்ரிஷ்யம் 3 வெளியான முதல் நாளான நேற்று செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று அப்படம் இந்தியாவில் மட்டும் மொத்தம் 18.37 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். வெளிநாடுகளில் 15 கோடி ரூபாயை அள்ளியிருக்கும் அப்படம் உலக அளவில் மொத்தம் முதல் நாளிலேயே 43 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாம். இனி வரும் நாட்களில் படம் மேற்கொண்டு பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதால்; இன்னும் சில நாட்களிலேயே இப்படம் நூறு கோடி ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் தொட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Read more about: drishyam 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X