Drishyam 3 Box Office: அடிபொலி.. 100 கோடி வசூலை நோக்கி த்ரிஷ்யம் 3 வசூல்.. லோகா வசூலை மிஞ்சுமா?

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகம் இந்த ஆண்டு தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்து வருகிறது. சினிமா ரசிகர்களை ஏமாற்றாமல் சரியான புதிய திரைக்கதைகளுடன் இயக்குநர்களும் நடிகர்களும் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளி வருகின்றனர்.

வாழ 2 வெற்றியைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் அடுத்து ஒரு பிளாக்பஸ்டர் படமாக த்ரிஷ்யம் 3 மாறியுள்ளது. படத்தின் எந்தவொரு சீனையும் வெளியிட்டு விடாதீர்கள் என்றும் ட்விஸ்ட் போனால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும் என நடிகை மீனாவும் பதிவிட்டுள்ளார்.

Drishyam 3 Day 2 Worldwide Box Office Collection is very huge

இந்நிலையில், கடந்த வியாழனன்று வெளியான த்ரிஷ்யம் 3 இதுவரை உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது என்றும் விரைவில் 100 கோடி வசூலை கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் ஃபயர் விடத் தொடங்கியுள்ளன.

த்ரிஷ்யம் 3 வசூல்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 21ம் தேதி வெளியான த்ரிஷ்யம் 3 திரைப்படம் முதல் 2 நாட்களில் மட்டுமே உலகளவில் 76.18 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கேரளா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பிறந்தநாள் பரிசு: மோகன்லாலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மே 21ம் தேதி பர்த்டே கிஃப்ட்டாக ரசிகர்களுக்கு வெளியான த்ரிஷ்யம் 3 படத்தை வேறலெவலில் திரையரங்குகளில் லாலேட்டன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் பாதி ஸ்லோவாக இருந்தாலும், 2ம் பாதியில் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து ரசிகர்களை சீட் எட்ஜில் உட்கார வைத்து அட போட வைத்த நிலையில், இந்த படமும் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது. த்ரிஷ்யம் 4 படமும் வரும் என லீடு கொடுத்து ஜீத்து ஜோசப் தான் உண்மையாகவே ஒரு த்ரிஷய்ம் டைரக்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

லோகா வசூலை முறியடிக்குமா?: சனிக்கிழமையான இன்று 3 நாட்களில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டிக்கெட் புக்கிங்கும் இன்று மற்றும் நாளையும் செம ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. மம்மூட்டி நடித்த பேட்ரியாட் படம் ஃப்ளாப் ஆன நிலையில், மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 கேரள திரையுலகை ஏமாற்றாமல் வெற்றி வாகை சூடியுள்ளது. 300 கோடி வசூல் செய்த லோகா படத்தின் சாதனையை மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படமாவது முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X