Drishyam 3 : பிரச்னை எல்லாம் ஓவரா? ஜார்ஜ் குட்டியாக லால் ஏட்டன் தண்ணி காட்டுவாரா? இதோ லாஸ்ட் அப்டேட்

சென்னை: மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான லால் ஏட்டன் என்று பேரன்போடு அழைக்கப்படும் மோகன் லாலின் 66ஆவது பிறந்த நாளில் திரிஷ்யம் 3 படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படம் மலையாளம் மட்டும் இல்லாமல், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்படி இருக்கையில் படத்தின் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கி டப்பிங் உள்ளிட்டவை தொடர்பாக, தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் மனு அளித்தது.

Drishyam 3 Release Confirmed Despite Legal Issue Mohanlal Shares Final Update

ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, 'திரிஷ்யம் 3' திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

3 வாரத்திற்குள்: இந்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்னும் 3 வாரத்திற்குள் படக்குழுவினர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி இருக்கையில் படம் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் படக்குழு தரப்பில் இது படத்தின் ரிலீஸை எந்த வகையிலும் பாதிக்காது என்பதால், புரோமோசன் வேலைகளை சிறப்பாக செய்து வந்தது. ஆனாலும் ரசிகர்களுக்கு கொஞ்சம் குழப்பம் இருந்து வந்தது. ஆனால் பிறந்த நாள் நாயகன், படத்தின் நாயகன் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் படம் இன்று வெளியாவது உறுதி என்பதைக் குறிக்கும் வகையில், திரிஷ்யம் 3 இன்று முதல் உலகமெங்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Drishyam 3 Release Confirmed Despite Legal Issue Mohanlal Shares Final Update

வசூல்: படத்திற்கு ஏற்கனவே முன் பதிவில் நல்ல வசூல் ஆகிவிட்டதால் படத்தின் வசூல் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலரும் மோகன்லாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X