அந்த நடிகர் என்னிடம் அத்துமீறினார்… இளம் பெண் பாலியல் புகார் !
கேரளா : நடிப்புப் பயிற்சி என்ற பெயரில் பிரபல நடிகர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி இளம் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
MeToo பிரச்சாரம், 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கம், பல பெண்கள் அதிகாரப் பதவிகளில் இருக்கும் ஆண்களால் பாதிக்கப்பட்ட கதையை இதில் பகிர்ந்துள்ளனர்.
கலை மற்றும் ஊடக வட்டாரங்களில் வலுப்பெற்று வரும் நிலையில், பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

நடிகர் அனீஷ் மேனன்
பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். இவர் தமிழில், தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, சூடானி ஃபிரம் நைஜீரியா, லூசிஃபர், ஒரு அடார் லவ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் மோனோ ஆக்டிங் பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். அப்போது தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக இளம் பெண் ஒருவர் மீடு புகார் கூறியுள்ளார்.

வரம்பு மீறினார்
அதில், பிரபல நடிகர் அனீஷ் மேனனிடம் மோனோ ஆக்ட் மாணவியாக நான் இருந்தேன். அப்போது அவர் என் கன்னங்களை இழுத்து பாசத்தை வெளிப்படுத்துவார். ஆனால் அவர் என்னிடம் அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு, உடலில் பல இடங்களை தொட்டார். இதுகுறித்து என் அம்மாவிடம் கூறினேன் ஆனால், அனீஷ் மோனோ ஆக்ட் உடலை தொடுவதும் ஒரு பயற்சி என்று என் பெற்றோரை நம்பவைத்தார்.

ஆபாசமாக பேசுவார்
அனீஷ் என்னிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து யாரிடமும் எனக்கு சொல்ல தைரியம் இல்லை. ஒருவேளை மோனோ-ஆக்ட் கற்பிக்கும் முறை இதுவாக இருந்தால் என்ன செய்வது? ஒரு வேளை இதையெல்லாம் நான் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று கூட எனக்குள் சந்தேகம் வந்தது. பயிற்சி முடிந்த பிறகும் வீட்டிற்கு போன் செய்து ஆபாசமாக பேசுவார்.

அழுகையை அடக்க முடியவில்லை
அனீஷுடன் ஒரு காதல் காட்சிக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது என் இரு கைகளையும் பிடித்து வலுக்கட்டாயமாக என் கழுத்தில் முத்தமிட்டார். என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை. அழுகையை அடக்க முடியாமல் என் பெற்றோரை அழைத்தேன். என்ன நடந்தது என்று கேட்டபோது, எனக்கு வயிற்று வலி என்று சொன்னேன். இனி மோனோ-ஆக்ட் கற்றுக்கொள்ளமாட்டேன் என்று அம்மாவிடம் சொன்னேன். அனீஷ் ஏதாவது தவறாக நடந்து கொண்டாரா என்று கேட்டனர். நான் தலையசைத்தேன். நாங்கள் கீழே இறங்கி வருவதற்குள் அனீஷ் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இன்னும் மீளமுடியவில்லை
பல வருடங்களுக்குப் பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. அந்த நடிகரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ள அந்த பெண், நான் பேசினால், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று ,பதிவை அந்த இளம் பெண் முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











